இலங்கை இயற்கை பேரிடர் உயிரிழப்புகள் 8 ஆக உயர்வு – தற்போதைய நிலை என்ன?

Share

இலங்கை இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

இயற்கை அனர்த்தங்களினால் மூவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

கண்டி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை, மாத்தறை, இரத்தினபுரி, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகள் இந்த இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளன.

3014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 952 குடும்பங்களைச் சேர்ந்த 3538 பேர் 51 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், 80 குடும்பங்களைச் சேர்ந்த 301 பேர் தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com