Browsing: செய்திகள்

மும்பை: கணவன் துணையோடு காதலன் கொலை; டிரம்மில் அடைத்து சாக்கடையில் வீசிய பெண் சிக்கியது எப்படி?

டிரம் கொலைகள் பற்றி உத்தரப் பிரதேசத்தில் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் மும்பையில் தற்போது அது போன்ற ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. மும்பை அருகில் உள்ள மும்ப்ரா என்ற இடத்தில் வசித்தவர் அர்பாஸ் அலிகான். இவர் வேலைக்குச் செல்வதாக தனது வீட்டில் கூறிவிட்டு கிளம்பிச் சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு இறுதியில் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து…

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது கேகேஆர்

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, 35 பந்துகளில் 93 ரன்கள் எடுத்த ஃபின் ஆலன், 10 சிக்ஸர்கள் விளாசினார்பிரசுரிக்கப்பட்டது 16 மே 2026, 13:54 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் 60வது லீக் சுற்றுப் போட்டியில் இன்று (மே 16) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது குஜராத் டைட்டன்ஸ். கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கேகேஆர்.குஜராத் டைட்டன்ஸ்…

‘குழந்தைகள் நம் சொத்து!’- மூன்றாவது குழந்தை பெற்றால் ₹30,000.. ஆந்திர முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தைச் சரிசெய்யும் நோக்கில், மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதியருக்கு ரூ.30,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடியாக அறிவித்துள்ளார். மாநிலத்தின் எதிர்கால மக்கள் தொகை சமநிலையை கருத்தில் கொண்டு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஆந்திரப் பிரதேசத்தில் சமீப ஆண்டுகளாக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாகக் குறைந்து வருவது மாநில அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, உழைக்கும் வயதுடைய இளைஞர்களின்…

“தாடி, தொப்பியுடன் இருந்தால் குறிவைக்கிறார்கள்” – மதராஸாவுக்கு சென்ற இந்த 163 சிறுவர்கள் தடுக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், BBC/Shahnawazபடக்குறிப்பு, ஒவ்வொரு ஆண்டும், பிஹாரின் சீமாஞ்சல் பகுதியிலிருந்து ஏராளமான குழந்தைகள் மற்ற மாநிலங்களில் உள்ள மதரஸாக்களில் படிக்கச் செல்கின்றனர்.கட்டுரை தகவல்எழுதியவர், சிது திவாரிபதவி, பிபிசி செய்தியாளர்பிரசுரிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்கடந்த மாதம் 11-ஆம் தேதி, பிஹாரைச் சேர்ந்த 163 சிறுவர்கள் மத்தியப் பிரதேசத்தின் கட்னி ரயில் நிலையத்தில் பாட்னா-புனே எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ரயில்வே போலீசாரால் ‘வலுக்கட்டாயமாக’ இறக்கிவிடப்பட்டனர்.ஆள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் இந்த 163 குழந்தைகள் மற்றும் 8…

வெற்றிப் பாதைக்கு வந்த தடை! ருதுராஜின் தவறால் பிளே ஆஃப் கனவு தவிடுபொடியாகுமா? | A Hurdle on the Path to Victory! Will Ruturaj’s Mistake Shatter the Playoff Dream?

ஐபிஎல் 2026 தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, சென்னையை அதிர்ச்சி தோல்வியடைய செய்தது.தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த லக்னோ அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில், சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 187/5 என்ற சவாலான ஸ்கோரை எட்டியது. ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தபோதிலும், பேட்ஸ்மேன்கள்…

வாகனங்களில் பாம்புகள் தஞ்சம் புகுந்தால் பதற்றப்படாமல் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்கடந்த வாரம், ஹைதராபாத்தில் உள்ள ஓர் உணவு விடுதியில் இருந்த மீன் தொட்டிக்குள் சாரைப் பாம்பு இருப்பதைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் ஸ்நேக்ஸ் சொசைட்டி என்ற அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்களை உதவிக்கு அழைத்தனர்.கோடை வெப்பத்துக்கு நடுவில் இளைப்பாறுவதற்குக் குளிர்ச்சியான இடம் தேடி கட்டடத்துக்குள் நுழைந்த பாம்பு, மீன் தொட்டிக்குள் தஞ்சம் புகுந்திருக்கலாம் என்று இந்தப் பாம்பை மீட்டது…

கருப்பு விமர்சனம்: சூர்யா – ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான படம் எப்படி உள்ளது?

பட மூலாதாரம், DreamWarriorPicturesபிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு ‘கருப்பு’ திரைப்படம் வெளியாகியுள்ளது.ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.குறிப்பிட்ட நேரத்தில் திரைப்படம் வெளியாகாமல் போனதற்கு கண்ணீரோடு ரசிகர்களிடம் ஆர்.ஜே. பாலாஜி மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டிருந்தார்.இந்த நிலையில் இன்று (மே 15) தமிழ்நாடு முழுவதும் ‘கருப்பு’ திரைப்படம் வெளியாகியுள்ளது.இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது? பல்வேறு ஊடக விமர்சனங்கள்…

பாலினப் பாகுபாட்டால் புறக்கணிக்கப்பட்ட மரபியல் அறிஞர் – X-Y குரோமோசோம் கண்டுப்பிடிப்பின் கதை | My Vikatan article about XY chromosome discovery

பாலின குரோமோசோம்கள் குறித்த நெட்டியின் ஆய்வு வெளியான அதே 1905 ஆம் ஆண்டில், அதே தலைப்பில் நெட்டியின் ஆராய்ச்சியை தவறாக புரிந்து கொண்ட பேராசிரியர்  எட்மண்ட் பீச்சர் வில்சனின் ஆய்வு கட்டுரையும்   வெளியிடப்பட்டது. எனினும், Y குரோமோசோம் தான் பாலினத்தைத் தீர்மானிக்கிறது என உறுதியாகக் சுட்டிக்காட்டிய முதல் நபர் நெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. தனது வாழ்க்கை முழுவதும்  ஆராய்ச்சி பணியை தொடர்ந்து  மேற்கொண்ட நெட்டி, ஹெட்டிரோ குரோமோசோம்களை முதன்முதலில் அடையாளம் கண்டார். இதன் மூலம், பாலின…

இரான் இந்த சிறு படகுகள் மூலம் அமெரிக்க கடற்படைக்கு சவால் கொடுப்பது எப்படி?

பட மூலாதாரம், NurPhoto via Getty Imagesகட்டுரை தகவல்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் இரானின் கடற்படையை “முற்றிலும் அழித்துவிட்டதாகவும்”, அதனிடம் தற்போது “இயந்திரத் துப்பாக்கி பொருத்தப்பட்ட சிறிய படகுகளாக மட்டுமே உள்ளது” என்றும் கூறினார்.இருப்பினும், சில மேற்கத்திய ஆய்வாளர்களால் “கொசுப் படை” என்று அழைக்கப்படும் இந்த “சிறிய படகுகள்” கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவையாகக் கருதப்படுகின்றன.உலகப் பொருளாதாரத்தைப் பாதித்து, இரான் உடனான மோதலைக் கைவிடுமாறு அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, உலகின் மிக முக்கியமான…

1 36 37 38 39 40 529