இரான் இந்த சிறு படகுகள் மூலம் அமெரிக்க கடற்படைக்கு சவால் கொடுப்பது எப்படி?

Share

இரானின் "கொசுப் படை" என்பது சிறிய மற்றும் அதிவேகத்தில் தாக்குதல் நடத்தும் திறன் உள்ள படகுகளைக் கொண்ட ஒரு கடற்படையாகும்.

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் இரானின் கடற்படையை “முற்றிலும் அழித்துவிட்டதாகவும்”, அதனிடம் தற்போது “இயந்திரத் துப்பாக்கி பொருத்தப்பட்ட சிறிய படகுகளாக மட்டுமே உள்ளது” என்றும் கூறினார்.

இருப்பினும், சில மேற்கத்திய ஆய்வாளர்களால் “கொசுப் படை” என்று அழைக்கப்படும் இந்த “சிறிய படகுகள்” கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

உலகப் பொருளாதாரத்தைப் பாதித்து, இரான் உடனான மோதலைக் கைவிடுமாறு அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்மூஸ் நீரிணையில் கடுமையான இடையூறுகளை ஏற்படுத்த, இரானிய ஆட்சிக்கு இந்தப் படகுகள் பல மாதங்களாக உதவி வருகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த ‘கொசுப் படை’ என்பது என்ன?

பாரம்பரியக் கடற்படைப் போருக்காக இந்தப் படை வடிவமைக்கப்படவில்லை.

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

‘தொந்தரவு செய், சூழ்ந்துகொள், குழப்பம் ஏற்படுத்து மற்றும் சீர்குலை’

சிறிய மற்றும் வேகமாக தாக்கும் திறன் உள்ள படகுகளைக் கொண்ட இந்தப் படை, 1980-களில் இரான் – இராக் போரின் போது இரானிய ஆட்சியால் உருவாக்கப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com