குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது கேகேஆர்

Share

35 பந்துகளில் 93 ரன்கள் எடுத்த ஃபின் ஆலன், 10 சிக்ஸர்கள் விளாசினார்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 35 பந்துகளில் 93 ரன்கள் எடுத்த ஃபின் ஆலன், 10 சிக்ஸர்கள் விளாசினார்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 60வது லீக் சுற்றுப் போட்டியில் இன்று (மே 16) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது குஜராத் டைட்டன்ஸ். கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கேகேஆர்.

குஜராத் டைட்டன்ஸ் இதற்கு முன் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. 12 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்த அந்த அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்க முடியும். ஆனால், டைட்டன்ஸ் அணியால் அதை செய்ய முடியவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 போட்டிகளில் 11 புள்ளிகள் பெற்றிருக்கிறது. புள்ளிப் பட்டியலில் அந்த அணி 7வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக தமிழ்நாடு ஸ்பின்னர் சாய் கிஷோர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கிறார்.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஃபின் ஆலன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் அரைசதங்கள் அடித்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com