மெஸ்ஸியை முந்தி எம்பாப்பே புதிய சாதனை: பிரான்சை வீழ்த்தி இங்கிலாந்து 3-வது இடம்

Share

பிரான்ஸ், இங்கிலாந்து, கால்பந்து உலக கோப்பை, மூன்றாவது இடம்

பட மூலாதாரம், Sarah Stier – FIFAFIFA via Getty Images

    • எழுதியவர், எம்மா ஸ்மித்
    • பதவி, பிபிசி விளையாட்டு செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

யாருமே விளையாட விரும்பாத ஒரு போட்டி, முடியவே கூடாது என எல்லோரும் நினைக்கும் ஒரு போட்டியாக மாறிவிட்டது.

உலக கோப்பை தொடரின் மூன்றாவது இடத்துக்கான போட்டி 10 கோல்கள் உடன் பரபரப்பான ஆட்டமாக மாறியது. இது ‘வெண்கலத்திற்கான போட்டி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் போட்டியில் 6 கோல்கள் அடித்து பிரான்ஸை இங்கிலாந்து வென்றது. கூடுதல் கோல்களும் அடிக்கப்பட்டிருக்கலாம் என்கிற அளவுக்கு இந்தப் போட்டி விறுவிறுப்புடன் இருந்தது.

1966 உலக கோப்பை இறுதிப் போட்டியில் சர் ஜியாஃப் ஹர்ஸ்டுக்குப் பிறகு உலக கோப்பை நாக் அவுட் போட்டி ஒன்றில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் இங்கிலாந்து வீரரானார் புகாயோ சாகா. உலக கோப்பைகளில் பிரான்சுக்கு எதிராக ஒரு போட்டியில் மூன்று கோல்கள் அடித்த மற்றுமொரு வீரர் பெலே தான்.

1966 உலக கோப்பையை வென்ற பிறகு இங்கிலாந்து பெற்ற அதிகபட்ச இடம் இதுவே. வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற உலக கோப்பை தொடர் ஒன்றில் இங்கிலாந்து பெற்ற சிறந்த முடிவும் இதுவே.

மூன்றாவது இடத்துக்கான போட்டிகளில் அதிக கோல் அடிக்கப்பட்ட போட்டியில் இதனை இங்கிலாந்து அணி சாதித்துள்ளது. முன்னதாக 1958-இல் மேற்கு ஜெர்மனி உடனான மூன்றாவது இடத்துக்கான போட்டியில் 6-3 என்கிற கணக்கில் அடிக்கப்பட்டிருந்த கோல்களை இந்தப் போட்டி விஞ்சியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com