வாரணாசியில் உள்ள மசூதி குறித்து பாகிஸ்தான் அதிபர் தெரிவித்த கருத்து – இந்திய தரப்பு கடுமையான எதிர்வினை
பட மூலாதாரம், RKபடக்குறிப்பு, மசூதியை காலி செய்ய வலியுறுத்தி ரயில்வே நிர்வாகம் சுவரில் நோட்டீஸ் ஒட்டியுள்ளதுபிரசுரிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்வாரணாசியின் கஞ்ச் ஷஹீதா மசூதி குறித்த பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது.வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சனிக்கிழமை ஊடகங்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில்,”பாகிஸ்தான் அதிபரின் ஆதாரமற்ற கருத்துக்களை இந்தியா முற்றிலுமாக நிராகரிக்கிறது. எப்படியிருந்தாலும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிக்க அவருக்கு எந்த உரிமையும்…









