Daily Archives: December 24, 2022

முதல்வரின் திறமையான செயல்பாடுகளால் தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது: துரைமுருகன் பேச்சு

அம்பத்தூர்: பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்தது. வில்லிவாக்கம் மேற்கு பகுதி செயலாளர் மற்றும் 8வது  மண்டல குழு தலைவர் கூ.பி.ஜெயின் தலைமை வகித்தார். திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், அமைச்சர் சேகர்பாபு, ஜெகத்ரட்சகன் எம்பி, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், ஜெகத்ரட்சகன் எம்பி பேசுகையில், ‘‘திமுகவினர் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என சிலர் அவதூறுகளை பரப்பி…

IPL Auction 2023: தம்பி 18 கோடி; அண்ணன் Unsold; ஏலத்தில் ஏமாற்றமளித்த வீரர்களின் பட்டியல்!

ஐ.பி.எல் மினி ஏலத்தில் 400 க்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலப்பட்டியலில் இருந்தனர். இதில் பலர் நல்ல விலைக்கு போவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு, அப்படியில்லாமல் ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்திருந்தனர். அவர்களின் பட்டியல் இதோ…சந்தீப் ஷர்மா:இந்திய வீரர் ஆன சந்தீப், ஒரு வேகப்பந்து வீச்சாளர். பல ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி உள்ளார். பவர்ப்ளேயில் ரொம்பவே சிறப்பாக வீசக்கூடியவர். பஞ்சாப், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிக்காக விளையாடி உள்ள சந்தீப் இந்திய அணிக்காகவும் சில போட்டிகளில் விளையாடி உள்ளார். இவருக்கு அடிப்படை…

ப்ரீபயாடிக்ஸ் நிறைந்த உணவுகள் பற்றி தெரியுமா..? இது நம் ஆரோக்கியத்திற்கு எந்த அளவு முக்கியமானது..?

நம் உடல் ஆரோக்கியத்திற்கு ப்ரீபயாடிக்ஸ் சத்து மிக முக்கியமானதாகும். முதன் முதலில் கடந்த 1995ஆம் ஆண்டு இது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இதனை கண்டறிவதற்கு முன்பாகவே 1950களில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகளில், குழந்தைகளுக்கு தாய்மார்கள் ஊட்டுகின்ற தாய்ப்பாலில் பைஃபைடூபாக்டீரியா என்னும் நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் இருப்பதாக தெரிவித்தனர்.இதேபோல, நம் குடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பாக்டீரியாக்களை பெற்றிடும் வகையில் நமது முன்னோர்கள் பால் சார்ந்த உற்பத்தி பொருட்களை அதிகம் உட்கொண்டனர் என்று பழங்கால குறிப்புகள் தெரிவிக்கின்றன. எல்லாவற்றையும்…

‘ராகுல் நேருவின் கொள்ளுப் பேரன்; நான் காந்தியின் கொள்ளுப் பேரன்’ – கமல்

பட மூலாதாரம், Makkal Needhi Maiam Twitter15 நிமிடங்களுக்கு முன்னர்காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்துள்ள ‘இந்திய ஒற்றுமை’ யாத்திரையில் கலந்துகொள்ள வேண்டாம் என பலர் தனக்கு அறிவுறுத்தியதாகவும், தான் ஓர் இந்திய குடிமகனாக கலந்துகொண்டதாகவும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். டெல்லியில் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின் நிகழ்வில் பங்குபெற்ற கமல்ஹாசன் ஓர் அரசியல் தலைவராக இல்லாமல், ஓர் இந்திய குடிமகனாக ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்துகொண்டதாக தெரிவித்தார்.…

யாத்திரைக்கு பதில் பொதுக்கூட்டம்: ராஜஸ்தான் பாஜ திடீர் பல்டி

ஜெய்ப்பூர்:  காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தானில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு மாநில பாஜ சார்பில் ஜன ஆக்ரோஷ் யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பாஜ பொது செயலாளர் அருண் சிங் நேற்று முன்தினம் கூறுகையில்  ‘‘அரசியலை விட மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்பதால் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது,’’ என  தெரிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து மாநில பாஜ…

Doctor Vikatan: நீரிழிவுக்கு முந்தைய நிலை… நிச்சயம் நீரிழிவாக மாறுமா? | Doctor Vikatan: Pre-diabetes… Will it definitely turn into diabetes?

ப்ரீ டயாபட்டிஸ் என கண்டுபிடிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு எதிர்காலத்தில் நிச்சயம் அது நீரிழிவாக மாறும் வாய்ப்புகள் அதிகம். எனவே ப்ரீ டயாபட்டிஸ் என்பது உறுதியானவர்கள், முதல் வேலையாக நேரடியாக எடுத்துக்கொள்ளும் சர்க்கரையை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். காபி, டீயில் சேர்க்கும் சர்க்கரை முதல், இனிப்புகள், ஜாம், இனிப்பு சேர்த்த உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். இட்லி, தோசை, சாதம் என கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைக் குறைத்துவிட்டு சிறுதானிய உணவுகளுக்கு மாறலாம். அந்த உணவுகள் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்காமல்…

IND vs BAN | இருமுறை தப்பித்த ஸ்ரேயஸ் ஐயர்; புஜாரா 7 ஆயிரம் ரன்… – 2வது டெஸ்ட் சுவாரஸ்யங்கள் | IND vs BAN | 2nd Test highlights

மிர்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 314 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 87 ரன்கள் முன்னிலை பெற்றது. மிர்பூரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தது. நேற்று 2-வது நாள் ஆட்டத்தை…

மானியம் பெற மின் இணைப்பு உடன் ஆதார் எண்ணை இணைக்க வற்புறுத்தக் கூடாது

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது.இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு  எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,…

புதுச்சேரியில் 28ம் தேதி பந்த்: அதிமுக அறிவிப்பு

புதுச்சேரி:  புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. தற்போது, புதுச்சேரி நிர்வாகத்தின் முழு அதிகாரமும் துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ளது.  அரசு நிர்வாகம் முடங்கி உள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது மத்திய அரசின் கடமை. எனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி வரும் 28ம் தேதி (புதன்) முழு அடைப்பு போராட்டம் நடத்த…

மீண்டும் கொரோனா: விமான நிலையங்கள் முதல் மருத்துவமனைகள் வரை ஆயத்தமாகும் மாநிலங்கள்! | corona prevention measure by state governments

கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று, உலகம் முழுவதும் பரவி கடும் உயிர்ச்சேதம், பொருளாதார இழப்புகளை கொடுத்தது. இந்தியாவையும் விட்டுவைக்காத இந்தத் தொற்று, பல லட்சம் உயிர்களை பலி கொண்டது. அரசின் தொடர் முயற்சி, சிகிச்சைகள், தடுப்பூசிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில், தற்போது சீனாவில் திரும்பவும் கொரோனோ தொற்று வேகமாகப் பரவத் தொடங்கி இருக்கிறது.சீனாவில் உள்ள மருத்துவமனைகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வருகின்றன.…