முதல்வரின் திறமையான செயல்பாடுகளால் தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது: துரைமுருகன் பேச்சு
அம்பத்தூர்: பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்தது. வில்லிவாக்கம் மேற்கு பகுதி செயலாளர் மற்றும் 8வது மண்டல குழு தலைவர் கூ.பி.ஜெயின் தலைமை வகித்தார். திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், அமைச்சர் சேகர்பாபு, ஜெகத்ரட்சகன் எம்பி, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், ஜெகத்ரட்சகன் எம்பி பேசுகையில், ‘‘திமுகவினர் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என சிலர் அவதூறுகளை பரப்பி…







