Doctor Vikatan: நீரிழிவுக்கு முந்தைய நிலை… நிச்சயம் நீரிழிவாக மாறுமா? | Doctor Vikatan: Pre-diabetes… Will it definitely turn into diabetes?

Share

ப்ரீ டயாபட்டிஸ் என கண்டுபிடிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு எதிர்காலத்தில் நிச்சயம் அது நீரிழிவாக மாறும் வாய்ப்புகள் அதிகம். எனவே ப்ரீ டயாபட்டிஸ் என்பது உறுதியானவர்கள், முதல் வேலையாக நேரடியாக எடுத்துக்கொள்ளும் சர்க்கரையை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். காபி, டீயில் சேர்க்கும் சர்க்கரை முதல், இனிப்புகள், ஜாம், இனிப்பு சேர்த்த உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

இட்லி, தோசை, சாதம் என கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைக் குறைத்துவிட்டு சிறுதானிய உணவுகளுக்கு மாறலாம். அந்த உணவுகள் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். எனவே நீங்கள் ப்ரீ டயாபட்டிஸ் நிலையிலேயே பல வருடங்கள் இருக்கவும் நீரிழிவு நிலையை எட்டாமலும் காத்துக்கொள்ளலாம்.

அடுத்து வாழ்வியல் முறை மாற்றம் கவனிக்கப்பட வேண்டும். உடற்பயிற்சியை வாழ்க்கையின் அன்றாடக் கடமையாக மாற்ற வேண்டும். தினமும் குறைந்தது 5 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும். மாடிப்படிகளில் ஏறி இறங்க வேண்டும். முடிந்தவர்கள் ஜிம்மில் சேர்ந்தும் உடற்பயிற்சிகள் செய்யலாம்.

இவற்றையெல்லாம் செய்யத் தொடங்கினால் நீரிழிவு பாதிப்பிலிருந்து விலகி இருக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com