புதுச்சேரி: `சிபிஎஸ்இ பாடத்திட்ட தேர்வில் 50 சதவிகித மாணவர்கள் தோல்வி’ – அதிர்ச்சி கொடுக்கும் திமுக
புதுச்சேரியில் கடந்த 2021-ல் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்திற்கு பா.ஜ.க கூட்டணி கட்சிகளைத் தவிர அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேபோல மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் குறைந்துவிட்டதாக பொதுநல அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன. இந்த நிலையில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் குறித்து பேசிய எதிர்கட்சித் தலைவரும், புதுச்சேரி தி.மு.க அமைப்பாளருமான சிவா, “அரசுப் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கும் 9,10 மற்றும் 11-ம்…








