கேரளம்: திருச்சூர் பூரத்துக்கு தயாரித்த பட்டாசு வெடித்து விபத்து; 13 பேர் பலி 5 பேர் கவலைக்கிடம்!
காயம் அடைந்தவர்களை மீட்டுச் செல்லும் காட்சிதிருச்சூர் பூரத்திற்காக பட்டாசுகள் தயாரித்து வந்த ஐந்து வெடிமருந்துக் கிடங்குகளில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 5 உடல்களும், மூன்று பேரின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று திருச்சூர் மாவட்ட ஆட்சியர் ஷிகா சுரேந்திரன் தெரிவித்தார். திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள 23 பேரில், ஐந்து பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவலைக்கிடமாக உள்ளவர்கள்…









