GT vs MI: "ஹர்திக் பாயுடன் இணைந்துதான் திட்டமிட்டேன்" – மும்பையின் கம்பேக் வெற்றி குறித்து அஸ்வனி

Share

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்20) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின.

இதில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றிருக்கிறது.

இதன் மூலம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது மும்பை அணி.

GT vs MI
GT vs MI

இந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியின் வெற்றிக்கு இளம் வீரரான அஸ்வனி குமார் முக்கியப் பங்காற்றி இருக்கிறார்.

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு பேசிய அஸ்வனி குமார், “எங்கள் அணி தோற்றுக்கொண்டிருந்த போதிலும், நாங்கள் பாஸிட்டிவாகத்தான் இருந்தோம்.

சீனியர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவரும் என்னை போன்ற இளம் வீரர்களுக்கு ஆதரவளித்தனர். ஒருபோதும் எங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் எப்போதும் ஒரு குடும்பத்தில் இருப்பது மாதிரியான சூழல்தான் இருக்கும்.

நீங்கள் சிறப்பாகச் செயல்படாதபோது கூட, அவர்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்குத் தேவையான ஊக்கத்தைக் கொடுப்பார்கள்” என்றிருக்கிறார்.

தொடர்ந்து நேற்றைய போட்டியில் ஆடியது குறித்து பேசிய அவர், “நான் ஹர்திக் பாயுடன் இணைந்துதான் திட்டமிட்டேன். ஆடுகளம் என்ன கேட்டதோ அல்லது அந்தச் சூழலுக்கு எது தேவையோ, அதற்கேற்ப நான் பந்து வீசினேன். தவிர எங்களிடம் மிகவும் வலுவான திட்டமிடலும் இருந்தது.

அஸ்வனி குமார்
அஸ்வனி குமார்

விக்கெட்டுகளைச் சரியாக எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஹர்திக் பாயுடன் ஆலோசித்த பிறகு, அதைச் சரியாகச் செயல்படுத்தினோம்.

எனக்கு எப்போதெல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நினைப்பேன். (நேற்றைய ஆட்டத்தில்) அது நடந்திருக்கிறது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று பேசியிருக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com