Browsing: விளையாட்டு

‘போலீஸ் என்ன கண்மூடித்தனமா அடிச்சாங்க; நான் யார்ன்னு சொல்லியும்’- வங்கதேச வீரர் குற்றச்சாட்டு | Bangladesh cricketer Nayeem Hasan alleges police assault in Chattogram

இந்நிலையில் காவல்துறையினர் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நயீம் ஹசன், “ஆரம்பத்தில் நான் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, எனது பைகளைச் சோதிக்குமாறு கூறினேன். ஆனால், அவர்கள் திடீரென எனது கழுத்தைப் பிடித்து இழுத்து, தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர். வங்கதேச வீரர் நயீம் ஹசன் நான் யார் என்று பலமுறை கூறினேன். ஆனால் அவர்கள் கேட்க மறுத்துவிட்டனர். போலீசார் என்னை லத்திகளால் கண்மூடித்தனமாகத் தாக்கினர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோதும், அங்கிருந்த பொறுப்பு அதிகாரி…

இந்திய அணி இல்லை என்றால் என்ன? FIFA கோப்பை தொடரில் தடம் பதிக்கும் இந்திய வம்சாவளி வீரர்கள்! | 4 Indian-Origin Players to play at FIFA World Cup 2026

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி விளையாட வேண்டும் என்பது கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நீண்ட நாள் கனவாகும். 2026 ஆண்டு உலகக் கோப்பையிலும் இந்திய அணி தகுதி பெறவில்லை என்றாலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் வெவ்வேறு நாடுகளின் சார்பாக உலகக் கோப்பை களத்தில் கால்பதிக்கத் தயாராகி, இந்திய ரசிகர்களுக்கு ஒரு புதிய பெருமிதத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளனர்.பிரான்ஸ் அணிக்காக விளையாடிய விகாஷ் தொராசோவிற்குப் பிறகு, இருபது ஆண்டுகள் கழித்து, இந்திய வேர்களை…

FIFA: 36 ஆண்டுகளுக்கு பிறகு முதல் உலகக் கோப்பை வெற்றி!- ஹைட்டியை ஸ்காட்லாந்து வீழ்த்தியது எப்படி?|Scotland beat Haiti 1-0 to end 36-year wait for fifa World Cup win

1990ஆம் ஆண்டுக்குப் பின் அந்த அணி உலகக்கோப்பையில் வென்றதே இல்லை என்பதால், இந்த 36 ஆண்டு கால ஏக்கத்தைத் தீர்த்த வெற்றியை மைதானத்தில் திரண்டிருந்த 30,000-க்கும் மேற்பட்ட ஸ்காட்லாந்து ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.உலகத் தரவரிசையில் 83-வது இடத்தில் இருக்கும் ஹைட்டி அணி, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஸ்காட்லாந்துக்குக் கடும் சவால் அளித்தது.குறிப்பாக ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் ஹைட்டி வீரர் ஃபிரான்ஸ்டி பியரோட் தலையால் முட்டிய பந்து, ஸ்காட்லாந்து கோல்கீப்பர் அங்கஸ் கன்னையும் தாண்டி நூலிழையில் வெளியேறியதால் ஸ்காட்லாந்து…

10 வயதில் அண்ணன் வைபவ் போல சதம் விளாசிய ஆசீர்வாத் சூர்யவன்ஷி: Aashirwad Suryavanshi, who smashed a century at age 10 like his elder brother Vaibhav: Cricket’s next big sensation!

அண்ணன் வைபவ் எப்படி பந்துவீச்சாளர்களை இரக்கமின்றி ஆக்ரோஷமாக எதிர்கொள்வாரோ, அதே பாணியைத்தான் தம்பி ஆசீர்வாத்தும் கையில் எடுத்துள்ளார். இருவருக்குமே களத்தில் தற்காப்பு ஆட்டத்தை விட, முதல் பந்திலிருந்தே அதிரடியாக மட்டையைச் சுழற்றி ஆதிக்கம் செலுத்துவதுதான் மிகவும் பிடிக்கும். அண்ணனின் ஆட்டத்தை நேரில் பார்த்து வளர்ந்ததால், அதே போன்றதொரு வெறியோடு சிறு வயதிலேயே தீவிர கிரிக்கெட் பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் ஆசீர்வாத்.ஆசீர்வாத்தின் இந்த முதல் சதத்தின் புகைப்படங்கள், ஸ்கோர்கார்டை அவரது மூத்த சகோதரர் உஜ்வால் சமூக வலைத்தளங்களில்…

FIFA 2026 உலகக் கோப்பை: நடனம், இசை, வண்ணமயமான கொண்டாட்டம்! – பிரமாண்ட தொடக்க விழா கிளிக்ஸ்

FIFA 2026 உலகக் கோப்பை: நடனம், இசை, வண்ணமயமான கொண்டாட்டம்! – பிரமாண்ட தொடக்க விழா கிளிக்Published:Today at 11 AMUpdated:Today at 11 AM நன்றி

‘நியூசிலாந்திற்காக விளையாடிய ஒவ்வொரு கணமும் பொன்னான நாட்கள்.!’- ஓய்வை அறிவித்த கேன் வில்லியம்சன் | Kane Williamson retires from international cricket

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். ஓய்வு குறித்து பேசியிருக்கும் கேன் வில்லியம்சன், ” சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறேன் என்ற இந்த முடிவை எடுப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ஒவ்வொரு கணமும் பொன்னானது.கேன் வில்லியம்சன்இத்தனை வருடங்களாக எனக்கு பக்கபலமாக இருந்த என் குடும்பத்தினர், சக வீரர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்களுக்கு என்…

மனு பாக்கரின் பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா திடீர் மரணம் | jaspal rana manu bhaker coach passes away

இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவானும், பாரீஸ் ஒலிம்பிக் நாயகி மனு பாக்கரின் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா (49), உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை இரவு அவர் உயிர் பிரிந்ததாக இந்திய தேசிய துப்பாக்கிச் சுடுதல் சங்கத்தின் (NRAI) தலைவர் கலிகேஷ் நாராயண் சிங் தியோ உறுதிப்படுத்தியுள்ளார். அவரது இந்த திடீர் மறைவு, இந்திய விளையாட்டு உலகை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.சமீபத்தில் ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த…

2026 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஒரு டிக்கெட் விலை 95 கோடியா? | 2026 FIFA World Cup final ticket price shock

உலகக்கோப்பை டிக்கெட் விலை நிர்ணயம் குறித்து ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்த சூழலில், இந்த மறுவிற்பனை விலை மேலும் சர்ச்சையை அதிகரித்துள்ளது. முன்னதாக, கோல் கம்பத்திற்குப் பின்னால் உள்ள நான்கு டிக்கெட்டுகள் சுமார் 2.3 மில்லியன் டாலர்களுக்கு மறுவிற்பனைக்கு வந்ததாக வெளியான செய்திகளும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.2022 கத்தார் உலகக்கோப்பையுடன் ஒப்பிடும்போது, இந்த முறை அதிகாரப்பூர்வ டிக்கெட் விலையே பல மடங்கு அதிகமாக உள்ளது. கத்தாரில் இறுதிப்போட்டிக்கான அதிகபட்ச அதிகாரப்பூர்வ டிக்கெட் விலை சுமார்…

`எண்களுக்குள் 2026 உலகக்கோப்பை' – 1248 வீரர்கள், புதிய அணிகள்! தலைசுற்ற வைக்கும் புள்ளிவிவரங்கள்!

கால்பந்து ரசிகர்களின் மிகப்பெரிய திருவிழாவான ஃபிஃபா உலகக்கோப்பை, இந்த முறை வரலாறு காணாத பிரமாண்டத்துடன் அரங்கேற உள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 உலகக்கோப்பை,இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இதுவரை இல்லாத வகையில் 48 அணிகள், 104 போட்டிகள், 1248 வீரர்கள் என புள்ளிவிவரங்கள் அனைத்தும் இந்தத் தொடர் எவ்வளவு பெரியது என்பதைப் பறைசாற்றுகின்றன. பல புதிய அணிகளின் அறிமுகம், உடையப்போகும் சாதனைகள் என இந்த உலகக்கோப்பை ஒரு புள்ளிவிவரப்…

FIFA உலகக்கோப்பை 2026 Zee-யில் ஒளிபரப்பு! எங்கு, எப்படிப் பார்ப்பது? | FIFA World Cup 2026 Zee India Broadcast

கடைசி நிமிடத்தில் உறுதியான ஒப்பந்தம்!உலகக்கோப்பைக்கான அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர் யார் என்று அறிவிக்கப்படாத முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது. சீனா போன்ற நாடுகள் கடந்த மே மாதமே தங்கள் ஒளிபரப்பு ஒப்பந்தங்களை உறுதி செய்த நிலையில், இந்திய ரசிகர்கள் கடைசி வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது Zee நிறுவனம் உரிமையைப் பெற்றிருப்பதால், அந்த நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.மூன்று நாடுகள், வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக்கோப்பை!1994-க்குப் பிறகு மீண்டும் வட அமெரிக்காவில் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா…

1 5 6 7 8 9 465