Browsing: விளையாட்டு

‘இலங்கையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம்!’ – இந்தியாவுக்கு எதிராக கெத்தாக களமிறங்கப் போகும் ஜிம்பாப்வே! |“After Defeating Sri Lanka, Tops the Points Table! – Confident Zimbabwe Set to Face India

சேஸிங்கை தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு அதன் ஓப்பனர்களான பிரையன் பென்னர்ட் மருமணி ஆகியோர் இணைந்து 69 ரன்களை சேர்த்தனர். மருமணியை வெல்லாலகே வீழ்த்த நம்பர் 3 இல் ரியான் பர்ல் அதிரடியாக 12 பந்துகளில் 23 ரன்களை சேர்த்திருந்தார். நம்பர் 4 இல் சிக்கந்தர் ராசா அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 45 ரன்களை சேர்த்து வெற்றியை உறுதி செய்தார். ஜிம்பாப்வே இடம்பெற்றிருந்த க்ரூப் B இல் தான் ஆஸ்திரேலியாவும் இருந்தது. உலகக்கோப்பையை நடத்தும் இலங்கையும் இருந்தது.…

IND VS NED: `பந்துவீச்சு ஆப்ஷன்கள் அதிகமாக இருப்பது ஒரு இனிய தலைவலிதான்.’ – கேப்டன் சூர்யா குமார் யாதவ் | SKY speaks about victory against Nederland

துபே பற்றி…துபே பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த இன்னிங்ஸ் அவருக்கு கிடைக்க வேண்டிய ஒன்று. நியூசிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் அவர் அருமையாக ஆடினார். அப்போது ஆட்டநாயகன் விருது கை நழுவியது. ஆனால் இன்றைய போட்டியில் மிடில் ஓவர்ஸில் அவர் ஆடிய விதம், அனைவரின் அழுத்தத்தையும் குறைத்தது. இந்த விக்கெட்டில் 190 ரன்கள் என்பது உண்மையிலேயே நல்ல ஸ்கோர்.‘அனைத்து பெட்டிகளும் டிக் ஆனதா?’ என்று கேட்டால், பெரும்பாலான விஷயங்கள் சரியாக நடந்திருக்கலாம். ஆனாலும், வெற்றி பெற்ற போட்டியில்கூட கற்றுக்கொள்ள…

IND v NED : `பொதுவாக நான் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடிக்க விரும்புவேன்; ஆனால்.!' – சிவம் துபே

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட் மற்றும் 66 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற செய்த சிவம் துபே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்,ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு சிவம் துபே பேசியதாவது,“இந்த விக்கெட்டில் பேட்டிங் செய்வது சற்று கடினமாகத்தான் இருந்தது. ஆனால் இதுபோன்ற சூழ்நிலைகளில்தான் பேட்டிங் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அந்த நேரத்தை நான் ரசித்தேன். சில சமயங்களில் அழுத்தம் இருந்தது உண்மைதான். குறிப்பாக ஆஃப்-ஸ்பின்னர் எனக்கு நன்றாக பந்துவீசினார். நான்கு…

T20 WC: வருண் சக்ரவர்த்தி மாயாஜாலம்: தோல்வியே சந்திக்காத அணியாக சூப்பர் 8-க்குள் நுழைந்த இந்தியா

இந்தியாவின் கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத அணியாக இந்தியா சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணிக்காகத் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். ஆனால் வழக்கம்போல் முதல் ஓவரிலேயே அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். இந்த…

T20 WC : `என் வாழ்க்கையை மாற்றியவர் தோனி’ – மனம் திறந்த உஸ்மான் தாரிக்

Usman Tariqபாகிஸ்தான் கிரிக்கெட்டில் தற்போது அதிகம் பேசப்படும் பெயர்களில் முக்கியமானவர், Usman Tariq.2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கைக்குரிய ஸ்பின்னராக மாறியுள்ள தாரிக்கின் இந்த அசத்தல் கம்பேக்கிற்கு பின்னால், ஒரு சினிமா கதையே காரணம் என்ற தகவல் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.நமீபியாவுக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்பு அளித்த பேட்டியில், இந்தியாவின் முன்னாள் கேப்டன் MS Dhoni-ன் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான MS Dhoni: The Untold Story தான், தன்னை மீண்டும் கிரிக்கெட்…

T 20 World Cup: ஜிம்பாவேவிடம் அதிர்ச்சி தோல்வி டு துரதிர்ஷ்டவசமான மழை! – ஆஸ்திரேலிய அணி- சறுக்கியது எங்கே? | where did the Australia national cricket team slip?”

பதும் நிசாங்காவின் விஸ்வரூபம்இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 181 ரன்கள் எடுத்தாலும், இலங்கை வீரர் பதும் நிசாங்கா வெறும் 52 பந்துகளில் சதம்  விளாசி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார். ஆசிய ஆடுகளங்களில் போதிய அனுபவம் இல்லாத ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்களால் இலங்கை பேட்டர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பதும் நிசாங்காதுரதிர்ஷ்டவசமான மழைஆஸ்திரேலியாவின் கடைசி நம்பிக்கை, அயர்லாந்து அணி ஜிம்பாப்வேயைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அந்தப் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது. இதனால் ஜிம்பாப்வேக்கு…

இந்தியில் பேச சொன்ன சூர்யா; 'எனக்கு இந்தி தெரியாது மச்சி!' என பதில் அளித்த வருண்! – வைரலாகும் வீடியோ

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்நிலையில், அந்த பாகிஸ்தான் போட்டிக்கு முன்பான இந்திய அணியினரின் உரையாடலின் போது தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ‘எனக்கு இந்தி தெரியாது’ எனக் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் ஜாலியாக கலந்தாலோசித்த வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது.அந்த வீடியோவில்…

T20 WC: தொடரில் இருந்து வெளியேறிய ஆஸ்திரேலிய அணி!- சறுக்கியது எங்கே? | The Australian team has been eliminated from the T20 World Cup

வெளியேறிய ஆஸ்திரேலிய அணிஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றுக்குச் செல்ல வேண்டும் என்றால், அயர்லாந்து அணி ஜிம்பாப்வேவை வீழ்த்த வேண்டும் என்ற இக்கட்டான நிலை இருந்தது. ஆனால், இன்று இலங்கையில் நடந்த அந்தப் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது.மழைக் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டதால், ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்குத் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் 5 புள்ளிகளுடன் ஜிம்பாப்வே சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது. வெறும் 2 புள்ளிகளுடன் இருந்த ஆஸ்திரேலிய அணி புள்ளிகள் அடிப்படையில்…

BBL: சென்னை சேப்பாக்கத்தில் பிக்பேஷ் தொடர்?- ஆஸ்திரேலியாவின் திட்டம் என்ன?|Big Bash league in Chepauk, Chennai? What is Australia’s plan regarding BBL

ஐபிஎல் லீக் போன்று ஆஸ்திரேலியாவில் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட T20 லீக் தொடர் பிக் பேஷ். ஐபிஎல் தொடருக்கு அடுத்தப்படியாக ரசிகர்களால் ரசிகப்படும் தொடராகவும் இது இருக்கிறது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், சிட்னி சிக்ஸர்ஸ், பிரிஸ்பேன் ஹீட், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி தண்டர், மெல்போர்ன் ரெனிகேட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் என மொத்தம் 8 அணிகள் இந்தத் தொடரில் விளையாடி வருகின்றன. பிக் பேஷ் தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தத் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி…

SL vs AUS: இளம் வயது; எளிய பின்னணி; முதல் சதத்தை பதிவு செய்த பதும் நிசாங்கா!- யார் இந்த வீரர்? | Pathum Nissanka hits first century of T20 World Cupwho is he?

யார் இந்த பதும் நிசாங்கா?இலங்கையில் உள்ள கல்லே(Galle) என்ற இடத்தில் பிறந்த பதும் நிசாங்கா (27) எளிய பின்னணியில் இருந்து வந்து இந்த இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறார். போதிய வசதிகள் இல்லாத சமயத்தில் கடற்கரை மணலில் பயிற்சி பெற்று தனது பேட்டிங் திறமையை நிசாங்கா வளர்த்துக்கொண்டிருக்கிறார். இலங்கை அணியில் இடம்பெறுவதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.பதும் நிசாங்கா2024-ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 210 ரன்கள் எடுத்து, ஒருநாள் போட்டியில் இரட்டைச்…