கேப்டனாக டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் கில்: ஜடேஜாவின் பல அதிரடி சாதனைகள்! | shubman Gill next to Don Bradman as captain Jadeja impressive achievements
இந்தியா – இங்கிலாந்து இடையே 5-வது டெஸ்ட் போட்டி இருதயத்துடிப்பைப் பாதிக்கும் த்ரில் பினிஷ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தொடரை இந்திய அணி சமன் செய்ய வாய்ப்பு, அதே வேளையில் முதல் டெஸ்ட் போல் இலக்கை இங்கிலாந்து விரட்டி விடவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், முதல் டெஸ்ட் பிட்ச் போல் இந்தப் பிட்ச் இல்லை. இந்தப் பிட்சும் கொஞ்சம் அதன் சாரத்தை இழந்திருந்தாலும் இன்னும் கொஞ்சமாகவேனும் சத்து உள்ளது. பிரஷர் போட்டால் இங்கிலாந்தை சுருட்டி தொடரைச் சமன்…