Browsing: விளையாட்டு

நார்வேயிடம் நாக் அவுட்; கண்ணீர் விட்டு அழுத நெய்மர் – சுக்குநூறான பிரேசிலின் உலகக் கோப்பை கனவு!| neymar cries brazil knocked out world cup by norway

கால்பந்து உலகின் மிகப்பெரிய கனவான உலகக் கோப்பையை வெல்லும் பிரேசில் அணியின் லட்சியம், இந்த முறையும் கண்ணீருடன் கலைந்துபோனது. நாக் அவுட் சுற்றில் நார்வே அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்து பிரேசில் வெளியேறியது. தனது கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம் எனக் கருதப்படும் இந்தப் போட்டியில், பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதது, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மைதானத்தில் உடைந்த நெய்மர்!மெட்லைஃப் மைதானத்தில் போட்டியின் இறுதி விசில்…

எம்பாப்பேவின் அலட்சியம்; கோல்கீப்பரின் ஆத்திரம்! பந்தால் முதுகில் அடித்த கில்; உலகக்கோப்பை சர்ச்சை!| Mbappe refuses to shake hands, agitated Gill throws ball at him

கடும் போராட்டத்திற்குப் பிறகு, பிரான்ஸ் அணி உலகக்கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது. ஆனால், அந்த வெற்றிக் கொண்டாட்டத்தை விட, போட்டி முடிந்தவுடன் நடந்த ஒரு சர்ச்சைதான் கால்பந்து உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பேவை, பராகுவே கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில் பந்தால் முதுகில் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஞாயிற்றுக்கிழமை நடந்த ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவேவை வீழ்த்தியது. போட்டியின் ஒரே கோலை எம்பாப்பே…

VAR அதிர்ச்சி, கடைசி நிமிட கோல்… கண்ணீரில் வெளியேறியது குரோஷியா! | Portugal vs Croatia FIFA World Cup 2026 VAR Goal

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில் கடைசி நிமிடங்கள் எப்படி ஒரு அணியின் தலையெழுத்தையே மாற்றும் என்பதற்கு நேற்றைய போட்டி ஒரு மிகச்சிறந்த உதாரணம். ரொனால்டோவின் வரலாற்று கோல், கடைசி நிமிடத்தில் ராமோஸின் த்ரில்லர் கோல், அதன்பின் VAR தொழில்நுட்பத்தால் மறுக்கப்பட்ட குரோஷியாவின் சமன் கோல் என அத்தனை நாடகங்களும் அரங்கேற, இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. குரோஷியா அணி வீரர்களும், ரசிகர்களும் கண்ணீருடன் தொடரிலிருந்து வெளியேறினர்.2026…

தோல்வியே இல்லை! சுவிட்சர்லாந்தின் அசுர வேட்டை தொடர்கிறது | Switzerland vs Algeria World Cup 2026 Football

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில், தோல்வியே சந்திக்காத தனது அசுரத்தனமான பயணத்தை சுவிட்சர்லாந்து தொடர்கிறது. வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் அல்ஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்தி, கடைசி 16 அணிகள் மோதும் அடுத்த நாக் அவுட் சுற்றுக்கு கம்பீரமாக முன்னேறியுள்ளது. அடுத்த வாரம் வான்கூவரில் நடைபெறும் நாக் அவுட் போட்டியில் கொலம்பியா அல்லது கானா அணியை சுவிட்சர்லாந்து எதிர்கொள்ள இருக்கிறது.சுவிட்சர்லாந்து அணியின் பயிற்சியாளர் முராத் யாக்கினின் தந்திரோபாய வியூகம் இந்த போட்டியில் பெரிய…

2010-க்குப் பிறகு முதல்முறை! உலகக்கோப்பை நாக் அவுட் தடையை உடைத்த ஸ்பெயின் | Spain vs Austria World Cup 2026 result

16 ஆண்டுகாலக் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. உலகக்கோப்பை கால்பந்து தொடர்களில் நாக் அவுட் சுற்றுகளில் தொடர்ந்து வெளியேறி வந்த சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஸ்பெயின் அணி. ஆஸ்திரியாவுக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, 2010-க்குப் பிறகு முதல் முறையாக ஒரு நாக் அவுட் போட்டியில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது “லா ரோஹா’ படை.அமெரிக்காவில் நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரின் நாக் அவுட் சுற்றில்,…

ஹாரி கேனால் நொறுங்கிய காங்கோவின் சரித்திரக் கனவு! | Harry Kane goals end Congo World Cup 2026 dream

75 நிமிடங்கள் வரை முன்னிலை, சரித்திரம் படைக்கும் அபாரமான ஆட்டம், கோல்கீப்பரின் வீரமிக்க தடுப்புகள்… அத்தனையும் கடைசி நேரத்தில் தவிடு பொடியாகின. இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் அடித்த இரண்டு கோல்களால், 2026 உலகக் கோப்பையில் ஜனநாயக காங்கோ குடியரசின் கனவுப் பயணம் கண்ணீருடன் முடிவுக்கு வந்தது.புதன்கிழமை நடைபெற்ற 32 அணிகள் மோதிய நாக்-அவுட் சுற்றில், இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது காங்கோ. ஆரம்பம் முதலே ஆட்டத்தில் அனல் பறந்தது. யாருமே எதிர்பாராத வகையில், ஆட்டத்தில் முன்னிலை…

ஒரு ரெட் கார்டு, 60,000 பீட்சாக்கள்! அமெரிக்க வீரரால் ரசிகர்களுக்கு ஜாக்பாட் | Folarin Balogun red card free pizza

அமெரிக்க கால்பந்து வீரர் ஃபோலாரின் பலோகன் உலகக் கோப்பை போட்டியில் வாங்கிய ஒரு ரெட் கார்டு, அவரது அணிக்கு தற்காலிக பின்னடைவைக் கொடுத்தாலும், ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக மாறியுள்ளது. பிரபல பீட்சா நிறுவனமான டோமினோஸ், இந்த ரெட் கார்டால் சுமார் 60,000-க்கும் மேற்பட்ட இலவச பீட்சாக்களை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இது கால்பந்து ரசிகர்களுக்கு இரட்டைக் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.திட்டம் போட்ட டோமினோஸ்!இந்த அறிவிப்பு திடீரென வந்தது அல்ல. 2026 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பே, டோமினோஸ்…

மெஸ்ஸி, ரொனால்டோவை முந்திய எம்பாப்பே – நாக்அவுட் சுற்றின் புதிய `சுல்தான்'

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) புதிய உலக சாதனைகளைப் படைத்து சரித்திரம் எழுதி வருகிறார்.செவ்வாய்க்கிழமை நடந்த Round 32 தகுதிச் சுற்றில், சுவீடன் அணிக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதில் 28 வயதான எம்பாப்பே அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில்…

Mbappe : இரட்டை கோல் மூலம் மெஸ்ஸியை நெருங்கிய எம்பாப்பே – ஸ்வீடனை ஊதித்தள்ளி முன்னேறிய பிரான்ஸ்!

2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் 32 அணிகள் மோதும் நாக்-அவுட் சுற்றில், கேப்டன் கிலியன் எம்பாப்பேவின் அசாத்தியமான ஆட்டத்தால், ஸ்வீடனை 3-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 16) பிரான்ஸ் அணி கம்பீரமாக முன்னேறியது.நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற இந்த முக்கியமான போட்டியில், பிரான்ஸ் அணியின் வெற்றிக்கு எம்பாப்பே அடித்த இரண்டு கோல்களே முக்கிய காரணமாக அமைந்தன. தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த போட்டியில் கலந்துகொள்ளாத பயிற்சியாளர் டிடியர்…

`புதிய சாதனைகளின் சங்கமம்’ – கால்பந்து வரலாற்றை மாற்றி அமைக்கும் 2026 FIFA உலகக்கோப்பைத் திருவிழா! | Number of records broken in 2026 fifa world cup

உலகையே ஒரே பந்தில் சுழல வைக்கும் ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பையின் விறுவிறுப்பு, 2026 ஆம் ஆண்டு புதிய சாதனைகளுடன் அரங்கேறி வருகிறது.அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக்கோப்பைத் தொடர், ஆரம்பம் முதலே பல புதிய வரலாற்றுப் பக்கங்களை எழுதி வருகிறது.வரலாற்றிலேயே முதன்முறையாக 48 அணிகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட தொடரில், மொத்தம் 104 போட்டிகள் விளையாடப்படுகின்றன. இந்த விரிவாக்கப்பட்ட புதிய ஆட்ட முறையானது கால்பந்து உலகின் பழைய சாதனைகள்…