காமனெயியை அமெரிக்காவும் இஸ்ரேலும் பல மாதங்கள் உளவு பார்த்து தாக்கியது எப்படி?

Share

காமனெயி மரணம், இரான், அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

இரான் அதிஉயர் தலைவர் காமனெயி கொல்லப்பட்ட தாக்குதல் எதிர்பார்க்கப்பட்ட நள்ளிரவு நேரத்தில் அல்லாமல், காலை வேளையில் நடந்துள்ளது.

ஏனெனில், அதற்கு சில மணிநேரத்திற்கு முன்பாக கிடைத்த முக்கியமான உளவுத்துறைத் தகவலை பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவும் இஸ்ரேலும் முடிவு செய்திருந்தன.

இரானிய மூத்த அதிகாரிகள் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பத்திற்காக பல மாதங்களாக அவர்கள் காத்திருந்தனர். அதிஉயர் தலைவர் அலி காமனெயி சனிக்கிழமை காலை மத்திய டெஹ்ரானில் உள்ள வளாகத்திற்கு செல்வார் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

அதே சமயத்தில், மற்ற மூத்த ராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் சந்திக்கும் இடத்தையும் தாக்க அவர்கள் முடிவு செய்திருந்தனர்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடந்த பல மாதங்களாக அதிஉயர் தலைவரின் நகர்வுகளை கண்காணித்து வந்தனர். அதற்கு அவர்கள் பயன்படுத்திய முறைகள் ரகசியமானவை என்றாலும் அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகப் பதிவொன்றில் அதுகுறித்து சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com