Browsing: அரசியல்

உ.பி. கோலா கோக்ராநாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன்கிரி வெற்றி

உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேசத்தின்  கோலா கோக்ராநாத் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன்கிரி 1,24,810 வாக்குக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கோலா கோக்ராநாத் தொகுதியில் சமாஜவாதி கட்சி வேட்பாளர் வினய் திவாரி 90,512 வாக்குக்கள் பெற்று தோல்வியடைந்தார். Source link

மதுராந்தகம் மேலவளம்பேட்டையில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: எம்எல்ஏ க.சுந்தர், எம்பி செல்வம் பங்கேற்பு

சென்னை: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்,   மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக மற்றும் கருங்குழி பேரூராட்சி திமுக சார்பில், பொது உறுப்பினர்கள் கூட்டம்  மேலவளம்பேட்டை கிராமத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, ஒன்றிய செயலாளர் படாளம் சத்யசாய் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் தசரதன், துணை தலைவர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட  செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு பெருந்தலைவர் செம்பருத்தி…

போர்க்கால அடிப்படையில் முதல்வர் நடவடிக்கை மழை பாதிப்புகளில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்: கே.எஸ்.அழகிரி பாராட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி டிசம்பர் 31 வரை பெய்யும் என்பதை கடந்த கால அதிமுக ஆட்சியாளர்கள் உணராத காரணத்தால் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கினால் நிகழ்ந்த உயிரிழப்புளும், பாதிப்புகளும் வார்த்தைகளால் வடிக்க இயலாது. அன்றைய அரசிடம் முறையான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் இத்தகைய பாதிப்புகள் கடந்த காலங்களில்…

அந்தமானில் இன்று திமுக முப்பெரும் விழா

சென்னை: ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில் அந்தமான் மாநில திமுக சார்பில் இன்று முப்பெரும் விழா நடக்கிறது. இதில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்கிறார். இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அந்தமான் மாநில திமுக சார்பில் முப்பெரும் விழா அந்தமான் மாநில திமுக அமைப்பாளர் குழந்தை தலைமையில், மாநில அவைத்தலைவர் மருதவாணன் முன்னிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி போர்ட்பிளேயர் மூவர்ண திடலில் இன்று சிறப்புரை ஆற்றவுள்ளார். ஆர்.எஸ்.பாரதி தலைமையில் பேரணியாக புறப்பட்டு, அந்தமான் மாநில திமுக…

அரசியல் சாசனத்துக்கு எதிராக பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வேண்டும்: தமுமுக பொதுக்குழு தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமை தாங்கினார். பொதுக்குழுவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளவை பரிசீலித்து, குறைந்தபட்சம் 5 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். சிறைகளில் நீண்ட நெடுங்காலமாக வாடி வரும் தண்டனை சிறைவாசிகள், குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்பட வேண்டும். கோவை வன்செயலுக்கு கண்டனம். பொது சிவில் சட்ட அபாயத்தை தமிழக அரசு களைய வேண்டும். தமிழகத்தின்…

ஜிஎஸ்டி போட்டது ஒன்றிய அரசு தான் பால் விலையை குறைக்க சொல்வது வேடிக்கை: அண்ணாமலையின் டிவிட்டர் பதிவுக்கு கண்டனங்கள் எழுகிறது

சென்னை: பால் விலையை  குறைக்க சொல்வது வேடிக்கையாக உள்ளது என்று அண்ணாமலையின் டிவிட்டர் பதிவுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஆவின் பால்விலை உயர்வு தொடர்பாக பாஜ தலைவர் அண்ணாமலை ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். ‘‘பொறுப்பற்ற முறையில் பொய்களை சொல்லாமல் பால் விலை உயர்வை, திரும்ப பெற வேண்டும்’’ என கூறியிருந்தார். இதற்கு தமிழக பால் வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், ‘‘ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி.யை பாலுக்கு கூட போட்டாங்க. இதுவரை வரலாற்றில் இல்லாத ஒரு நிகழ்வு. பாலுக்கு…

தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக கட்டணம் கேட்டு மாணவர்களிடம் நிர்ப்பந்தம்: அரசு தீர்வு காண கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டு அனைத்து சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அனைத்துப் பிரிவினருக்கும் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான கட்டணக்குழு உயர்த்தியது. அதன்படி, அரசு ஒதுக்கீட்டின் கீழ் சுயநிதி மற்றும் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்கள் கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.4.35 லட்சம் முதல் ரூ.4.50 லட்சம் வரை செலுத்துகின்றனர். தனியார் மருத்துவப்…

ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை ஆவின் பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 அளவுக்கு குறைத்தது திமுக, தற்போது, 1 லிட்டர் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை அட்டைதாரர்களுக்கு 46 ரூபாய்க்கும், சில்லரை விலையில் வாங்குபவர்களுக்கு 48 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதை இன்று (நேற்று) முதல் ஒரு லிட்டர் 60 ரூபாய் என ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. ஒரு லிட்டர் பால் விலை 12 ரூபாய் அளவுக்கு…

சொல்லிட்டாங்க…

அரசியலில் உயர் பதவிக்கான லட்சியம் இருப்பது நியாயமானதுதான். அதில், ஒருவரது அணுகுமுறையே அவரை உச்சத்துக்கு கொண்டு செல்லும்.- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 8 ஆண்டுகளாக நாட்டில் ஜனநாயகம் கொல்லப்படுகிறது. அரசியல் அராஜகத்தை தடுக்காவிட்டால் நாட்டிற்கே ஆபத்து.- தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்காற்றின் தரம் மேம்படும் வரையில் டெல்லியில் அனைத்து ஆரம்ப பள்ளிகளும் மூடப்படும்.- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தால் ெகாள்முதல் செய்யப்படும் பாலின் விலை உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.- பாமக…

பாசிச ஆட்சி தொடர்ந்து நடந்தால் நாடாளுமன்றம் இருக்கும் ஜனநாயகம் இருக்காது: ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

மன்னார்குடி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய “மகாத்மா மண்ணில் மதவெறி” என்ற நூலின் அறிமுக விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட மையத்தின் சார்பில் மாவட்ட தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் மன்னார்குடியில் நேற்று நடந்தது. ஜி.ராமகிருஷ்ணன் ஏற்புரை வழங்கி பேசியதாவது: இந்துத்துவம் எனும் பாசிசத்தின் ஆட்சி தொடர்ந்து நடந்தால் நாடாளுமன்றம் என்ற கட்டிடம் மட்டும் தான் இனி இருக்கும். ஜனநாயகம் என்பது இருக்காது. சர்வாதிகார ஆட்சி தான்…

1 69 70 71 72 73 161