Browsing: அரசியல்

சொல்லிட்டாங்க…

* தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று குஜராத் அரசு நினைப்பதால் மோர்பி பால விபத்து குறித்து மன்னிப்பு கேட்கவில்லை. – காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்* கெஜ்ரிவால் ஒருவேளை ஊழல்வாதியோ அல்லது தீவிரவாதியாகவோ இருந்தால் கைது செய்யலாம். – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்* குதிரை பேரம் நடத்த முடியாத மாநிலங்களில் கவர்னர்களை பயன்படுத்தி ஒன்றிய அரசு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. – கேரள முதல்வர் பினராயி விஜயன்* பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க…

அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை மறுக்க முயல்வதா? சமூகநீதிக்கு எதிரான அரசாணை 115-ஐ ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி இராமதாஸ் அறிக்கை

சென்னை: அரசு ஊழியர்களின் பணித்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறையில் மாற்றங்களையும், மேம்பாடுகளையும் செய்வது வரவேற்கத்தக்கதும், அவசியமானதும் ஆகும். அதே நேரத்தில் ஆள்தேர்வு முறையில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களை சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழக அரசுப் பணிகளுக்கான ஆள் தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றங்களை செய்தல், நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து…

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் டிடிவி கூட்டணி?.. ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

திருச்சி: பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்; அதிமுகவை யாராலும் மிரட்ட முடியாது. அதிமுக தொண்டர்களை யாராலும் பிளவுப்படுத்தி பார்க்க முடியாது. அதிமுக இடத்தை பாஜக பிடிக்க பார்க்கிறது என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிமுகவின் ஒற்றுமையை பாஜக சீர்குலைக்கவில்லை. அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக நிற்கின்றனர். தலைமையில் பிரச்சனை இருப்பது போல மாயத்தோற்றம் நிலவுகிறது. அதிமுகவில்…

கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன்: கமல்ஹாசனுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே என்று கூறி கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தீராக் கலைத் தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத் தோழர் கமல்ஹாசனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். Source link

கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி ஜனாதிபதியை சந்திக்க திமுக கூட்டணி எம்.பி.க்கள் முடிவு: கனிமொழி எம்.பி. பேட்டி

சென்னை: கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி ஜனாதிபதியை சந்திக்க திமுக கூட்டணி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர் என்று கனிமொழி எம்.பி. கூறினார். சென்னை அடையாறில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற  கனிமொழி எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறும் விவகாரம் தொடர்பாக திமுக கூட்டணி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். பாஜ ஆளாத மாநிலங்களில் மாநில உரிமைகளை மீறும் வகையில்…

கோபால்கஞ்ச் தொகுதி இடைத்தேர்தலில் 1,794 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.ஜே.டி. வேட்பாளரை வீழ்த்தி பாஜகவின் குசும் தேவி வெற்றி

பீகார்: கோபால்கஞ்ச் தொகுதி இடைத்தேர்தலில் 1,794 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.ஜே.டி. வேட்பாளரை வீழ்த்தி பாஜகவின் குசும் தேவி வெற்றி பெற்றார். அதே தொகுதியில், அசாதுதின் ஓவைசியின் AIMIM கட்சி வேட்பாளர் 12,214 வாக்குகளையும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் 8,854 வாக்குகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. Source link

தேர்தலில் போட்டியிட தந்தைக்கு சீட் மறுப்பு; மாஜி அமைச்சர் மீது கறுப்பு மை வீச்சு: குஜராத் காங்கிரசில் பரபரப்பு

அகமதாபாத்: தேர்தலில் போட்டியிட தனது தந்தைக்கு சீட் மறுக்கப்பட்டதால் முன்னாள் அமைச்சர் மீது கறுப்பு மை வீசப்பட்ட சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. குஜராத் சட்டப் பேரவை தேர்தல் வரும் டிச. 1 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் மாநில தலைமையகம் அமைந்துள்ள அகமதாபாத்தில், வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள்…

தெலுங்கானாவில் முனுகோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வேட்பாளர் பிரபாகர் ரெட்டி 88,716 வாக்குகள் பெற்று வெற்றி

தெலுங்கானா: தெலுங்கானாவில் முனுகோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வேட்பாளர் பிரபாகர் ரெட்டி 88,716 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டிஆர்எஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜகோபால் ரெட்டி 79,630 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். Source link

பாலம் விபத்தில் 135 பேர் பலியானதால் எதிர்ப்பு அலை: கோட்டையை கோட்டை விடும் அச்சத்தில் பாஜ: மோர்பி வேட்பாளரை தேர்வு செய்வதில் தயக்கம்

மோர்பி: மோர்பி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் பாஜ தலைமை திணறி வருகிறது. குஜராத்தை கால் நூற்றாண்டாக ஆண்டு வரும் பாஜ.வுக்கு, அடுத்த மாதம் நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தல் அக்னி பரீட்சையாக மாறி உள்ளது. வலுவாக இருந்த பாஜ, பில்கிஸ் பானு குற்றவாளிகள் விடுதலை, கல்வி, சுகாதாரம் மோசம், விவசாயிகள் பிரச்னைகள், அதிக மின் கட்டணம், மோசமான சாலைகள், இளைஞர்கள் அதிருப்தி, ஆட்சிக்கு எதிரான அலை என பல பிரச்னைகளால் சற்று ஆட்டம் கண்டுள்ளது.…

சொல்லிட்டாங்க…

தேர்தலில் குஜராத் பற்றி அவதுாறு செய்தவர்கள் மாநிலத்தை விட்டு விரட்டப்படுவார்கள். : – பிரதமர் நரேந்திர மோடிபாஜ ஆட்சிக்கு வந்தால், இமாச்சலில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். : – பாஜ தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாஅருங்காட்சியகத்தில் முதல்வர்களின் படங்கள் இருக்கும். அதில் பாசாங்கு செய்பவர்களின் படம் இடம்பெறாது. : – மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரே.ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஒரு அரசியல் பிரிவுதான் பாஜ. பாஜ பேரணி நடத்தினால் எதிர்க்க மாட்டோம். : – விசிக…

1 68 69 70 71 72 161