தவெக கூட்டம் காவிரி பிரச்னையை திசைதிருப்பும் நாடகம்: கனிமொழி கடும் தாக்கு! | Kanimozhi DMK Boycotts TVK Delimitation Meeting; Calls It a Distraction

Share

தொகுதி மறுவரையறை மசோதா குறித்துப் பேச அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது தவெக அரசு.

ஆனால், இதில் திமுக எம்.பி-க்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்தும், இது காவிரிப் பிரச்னையைத் திசைதிருப்பத் த.வெ.க. அரசு நடத்தும் நாடகம்தான் எனக் குறிப்பிட்டு திமுக எம்.பி கனிமொழி பதிவிட்டிருக்கிறார்.

கனிமொழி கண்டனம்

கனிமொழி கண்டனம்

அந்தப் பதிவில் அவர், “தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் #FairDelimitation என்பதிலும் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழகம் தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.

இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப்போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு இன்னும் கையில் கிடைக்கப்பெறவும் இல்லை. இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com