Browsing: அரசியல்

சொல்லிட்டாங்க…

* பழைய ஓய்வூதியத்தை ரத்து செய்ததன் மூலம், நாட்டில் உள்ள முதியோர்களின் நிதி பாதுகாப்பை பாஜ பறித்துள்ளது. – காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி* அமலாக்க இயக்குனரகம் ஒரு சுதந்திரமான அமைப்பு அல்ல, மாறாக மோடி மற்றும் அமித்ஷாவின் கைகளில் உள்ள அரசியல் ஆயுதம். – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்* சைபர் தாக்குல் ஆபத்தானது. இது, நாட்டின் பாதுகாப்பு உள்கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தி பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. – ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்*…

தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் அரசாணை எண் 115ஐ திரும்பப்பெற வேண்டும்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: மனித வளம் தொடர்பான சீர்திருத்தங்கள் என்று நிதிநிலை அறிக்கையில் சொல்லிவிட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக மனிதவள மேலாண்மைத் துறை மூலம் 18-10-2022 நாளிட்ட அரசாணை எண் 115 வெளியிடப்பட்டு இருக்கிறது. அரசுப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், அதன்மூலம் பணியின் தரம் குறைவதற்கும், இடஒதுக்கீடு என்பதே இல்லாமல் போவதற்கும், அரசின் ரகசியங்கள் வெளியிலே செல்வதற்கும், ஊழல் பெருகுவதற்கும் வழிவகுக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அரசு வேலைவாய்ப்பு என்பதே இல்லாமல்…

குஜராத் சட்டசபை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ரிவாபா ஜடேஜா, ஹர்திக் படேலுக்கு வாய்ப்பு

காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டது. தேர்தலில் போட்டியிடும் 89 வேட்பாளர்களின் பட்டியலை ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ் வெளியிட்டார். பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் டிச.1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. குஜராத் மாநிலத்தில் முதல் கட்டத்தில் 89 தொகுதிகளும், இரண்டாம் கட்டத்தில் 93 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும். பதிவான வாக்குகள் டிசம்பர் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள்…

குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் 100 வேட்பாளர்களின் பட்டியலை ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ் வெளியிட்டார். கட்லோடியா சட்டப்பேரவை தொகுதியில் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் போட்டியிட உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். Source link

பணமதிப்பிழப்பினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து வெள்ளை அறிக்கையை மோடி வெளியிட வேண்டும்: தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்

சென்னை: பணமதிப்பிழனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டு மக்களுக்கு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கே.எஸ்., அழகிரி வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பு செய்து நேற்றோடு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. நாட்டு மக்களை கடும் துன்பத்திற்கு ஆளாக்கிய அறிவிப்பு வெளியிட்டு கடந்த ஆறு ஆண்டுகளில் இதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து ஆய்வு செய்தால் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும்…

உயர் பிரிவு ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டுக்கு கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு

புதுடெல்லி: குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று 3 நீதிபதிகளும், ஏற்புடையது அல்ல என்று 2 நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரவேற்றுள்ளார். காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்…

மாநகராட்சி பணிகளை தனியார்மயமாக்கும் உத்தரவை ரத்து செய்ய ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: மாநகராட்சி பணிகளை தனியார்மயமாக்கும் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை பெரு மாநகராட்சி தவிர்த்து, 20 மாநகராட்சிகளில் உள்ள பணிகளை வெளிமுகமை மூலம் மேற்கொள்ள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த உத்தரவில் 35,000க்கும் மேற்பட்ட நிரந்தர பணியிடங்களை 3,500 பணியிடங்களாக குறைத்துள்ளதாகவும், தற்போது பணியாற்றி வரும் பணியாளர்கள் ஓய்வு பெற்றபின் அந்த பணியிடங்களை நிரப்பக்கூடாது என்றும், அந்த…

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி பற்றிய செய்திகளே இல்லை: தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு

சிம்லா: காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி பற்றிய செய்திகளே இல்லை; வெறும் சண்டைகள் மட்டுமே உள்ளன என பிரதமர் மோடி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியால் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரு நிலையான ஆட்சியை கொடுக்க இயலாது, இமாச்சல பிரதேசத்தில் நிலையான மற்றும் வலுவான அரசு தேவை என தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேசியுள்ளார். Source link

அரசாணை 115ஐ ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் ேதர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதன் மூலம் 69 சதவீத இட ஒதுக்கீடு அரசு வேலைவாய்ப்புகளில் கடைபிடிக்கப்படுகிறது. தமிழக அரசு, இனி அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இதற்காக, தமிழக அரசின் மனித வள மேலாண்மை துறை அரசாணை எண். 115…

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்ய ஆணையம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் கரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தமிழ்நாட்டில் இதுவரை இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள்…

1 67 68 69 70 71 161