Browsing: அரசியல்

ஆயுள் தண்டனை அனுபவிக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்: முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று வெளியிட்ட அறிக்கை: சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த கோவை அபுதாஹிர் பிப் 8ம் தேதி மணம் அடைந்திருக்கிறார்.இன்னும் மீதமிருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளின் மீதியுள்ள வாழ்க்கையும் சிறையில் முடிந்துவிடாமல் துரித நடவடிக்கையை மேற்கொண்டு விடுதலை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் வர்கள் உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இந்தருணத்தில் தமிழக அரசு, 20 ஆண்டுகளை கடந்த நீண்ட கால ஆயுள் சிறைவாசிகளின்…

வேட்பாளருக்கு ஆதரவு மட்டும் தான்; அதிமுக பிரசாரத்தை புறக்கணிக்கும் பாஜக?.. தேர்தல் குழு எங்கே என தேடும் அதிமுக நிர்வாகிகள்

சென்னை: அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தை பாஜ நிர்வாகிகள் புறக்கணித்து வருகின்றனர். இது ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நிறுத்திய வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் வாங்கிய நிலையில், எடப்பாடி தரப்பு மட்டும் வேட்பாளரை இரட்டை இலை சின்னத்தில் நிறுத்துகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்…

83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு ஓபிஎஸ் அணி மனு தள்ளுபடி

ஈரோடு கிழக்கு ெதாகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது. மனு தாக்கல் செய்த 96  வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கலந்து  கொண்டனர்.  தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் முன்னிலையில்  நடைபெற்ற பரிசீலனையில் 121  வேட்புமனுக்களில் 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் செந்தில்முருகன் தனது வேட்புமனுவில் அதிமுக என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால்   அதிமுக தலைமையில் இருந்து ஏ, பி படிவங்கள் இணைக்கப்படாமல் இருந்தது. எனவே அவரது மனு தள்ளுபடி  செய்யப்பட்டது.…

கட்சியை அடமானம் வைத்ததால் ஓபிஎஸ் அணி நிர்வாகி திமுகவுக்கு ஆதரவு: பாஜ பிரமுகரும் முழுக்கு

தமிழ்நாடு பாடநூல் கழக முன்னாள் தலைவரும், அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணி சிறுபான்மை பிரிவு மாநில செயலாளருமான கா.லியாகத் அலிகான், அக்கட்சியில் இருந்து விலகி நேற்று ஈரோட்டில் அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில்பாலாஜி ஆகியோரை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் லியாகத் அலிகான் கூறுகையில், ‘2017 வரை எம்ஜிஆர் இயக்கம் என்ற இயக்கத்தை நடத்தி வந்தேன். அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என  பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக இருந்து வந்தேன்.…

அதானி பங்கு வீழ்ந்ததை போல் மோடியும் வீழ்வார்: மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி பேச்சு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், இந்தியாவில் பிரதமர் மோடி வளர்ந்தபோது அதானியும் வளர்ந்துள்ளார். தற்போது அதானியின் பங்கு வீழ்ச்சி அடைந்ததை போல், ஒருநாள் பிரதமர் மோடியும் செல்லாக்காசாக மாறி வீழ்ச்சியடைவார். இவர்கள் தேசபக்தி என்ற பெயரில் ஒட்டுமொத்த நாட்டையே கொள்ளையடித்து உள்ளனர். கொரோனாவை எதிர்கொண்டு ஒன்றிய அரசு நிதிச்சரிவை சந்திக்கவில்லை என்கிறார் ஒன்றிய நிதியமைச்சர். ஆனால், கொரோனாவின்போது அதானியின் பங்கு 6 சதவீதம் அதிகரித்தது…

ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம்; காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் என 4 முனை போட்டி: முற்றுகையிட்டு வரும் கட்சி தலைவர்களால் சூடுபிடித்த இடைத்தேர்தல்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முற்றுகையால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், தற்போது தேர்தல் பிரசாரங்கள் அங்கு சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் அனைவரும் ஈரோடு கிழக்கு…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : காங்கிரஸ், அதிமுக தேமுதிக, நம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு..

ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்த் மனுவும் ஏற்கபட்டது. ஓ பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர்…

தமிழ் மகன் உசேன் பேட்டி தேர்தல் பிரசாரத்துக்கு ஓபிஎஸ் அழைக்கப்படுவாரா?

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய, ஓபிஎஸ்சை  அழைப்பது குறித்து, கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பாளர் குறித்து தேர்தல் ஆணையம் விதித்த உத்தரவுக்கு இணங்க, பொதுக்குழு உறுப்பினர்களின் படிவங்களுடன் டெல்லி சென்ற அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், நேற்றுமுன்தினம் நள்ளிரவு டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை…

ஓபிஎஸ் தரப்பினர் பேட்டி இபிஎஸ் தரப்புக்கு சின்னம் போனதால் பின்னடைவு இல்லை

சென்னை: இரட்டை இலை சின்னம் இபிஎஸ் தரப்புக்கு போனதால், ஓபிஎஸ் தரப்புக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறினார். சென்னையில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் திமுகவை எதிர்த்து நிற்கிறோம். அவரவர் பாணியில் அவரவர்கள் இரட்டை இலைக்காக பிரசாரம் செய்வோம். இரட்டை இலை சின்னம், இபிஎஸ் தரப்புக்கு போனதால் எந்த பின்னடைவும் இல்லை. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்காக மட்டுமே உச்ச நீதிமன்றம் இடைக்கால…

ஈரோட்டில் பிப்.24ல் முதல்வர் பிரச்சாரம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிப்.24ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார். Source link

1 24 25 26 27 28 161