Browsing: அரசியல்

ஓடி ஓடி ஓட்டு கேட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் வீரப்பன் சத்திரம், அசோகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். வழக்கமான பிரசாரமாக அல்லாமல் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு நாளும் பிரசார யுக்திகளை அமைச்சர் செந்தில்பாலாஜி கையாண்டு வருகின்றார். நேற்று அசோகபுரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

70,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற உழைக்க வேண்டும்: துரைமுருகன் பேச்சு

ஈரோடு கிழக்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிசார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகின்றார். தேர்தல் பணிகள் குறித்து நேற்று திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நாட்டிலேயே சிறந்த முதல்வராக திறம்பட பணியாற்றி வருகிறார். கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் டெல்லி சென்று பிரதமர்களை சந்தித்து எத்தனையோ திட்டங்களையும், உரிமைகளையும் பெற்றுத்தந்தார். ஆனால் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கிருந்தே டெல்லியை ஆட்டி படைக்கிறார். இந்த இடைத்தேர்தல்…

நான் அண்ணாமலையின் ‘ஏ’ டீம் காயத்ரி ரகுராமுக்கு பதிலடி கொடுப்போம்: சூர்யா சிவா பேட்டி

திருச்சி: ‘அண்ணாமலையை விமர்சித்து வரும் காயத்ரி ரகுராமுக்கு பதிலடி கொடுப்போம்’ என சூர்யா சிவா தெரிவித்தார். பாஜக ஓபிசி அணியின் முன்னாள் மாநில செயலாளர் சூர்யா சிவா திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: ரவுடி வரிச்சூர் செல்வம், காயத்ரி ரகுராம் இணைந்து இருக்கும் படத்தை டிவிட்டரில் வெளியிட்டதற்காக தான் மன்னிப்பு கேட்டதாக வரிச்சூர் செல்வம் கூறி உள்ளார். அவர்தான் என்னிடம் கேட்டார் (அதற்கான ஆடியோவை சூர்யா சிவா வெளியிட்டார்). அந்த புகைப்படத்தை அகற்றக் கூறி கெஞ்சியதால் போட்டோவை…

எடப்பாடி பழனிச்சாமி கருத்து எதிரொலி; ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரத்தை அண்ணாமலை புறக்கணிக்க முடிவா?.. கடும் அதிருப்தியில் பாஜ மூத்த நிர்வாகிகள்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 பேர் களத்தில் உள்ளனர். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் களம் இறக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களை கட்டியுள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்,…

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி? பிரேமலதா பேட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் அறிவித்தவுடன், தேமுதிக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என  பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிக கொடி நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பங்கேற்று தேமுதிக கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு சேலை மற்றும் இனிப்பு வழங்கினார். தொடர்ந்து பிரேமலதா அளித்த பேட்டி: ஈரோடு இடைத்தேர்தலில், தேமுதிக வெற்றி பெறும். ஈரோடு மாவட்டத்தில் விஜயகாந்த்…

அரசியலில் எனது எதிரி சாதிதான்: கமல்ஹாசன் பேச்சு

சென்னை: இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித்தின் நீலம் புத்தகம் சம்பந்தமான நிகழ்ச்சி நேற்று சென்னை எழும்பூரில் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பேசியதாவது:உயிரே, உறவே, தமிழே என்ற இந்த வாக்கியத்தை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி இருந்தாலும், இதுதான் என் வாழ்க்கையின் உண்மை தத்துவம். இது அலங்காரத்துக்காக சொல்லும் வார்த்தை அல்ல. இந்த உறவு இருந்தால்தான் என்னால் உயிர் வாழ முடியும். இது மூன்றையும் காக்க வேண்டியது என் கடமை.…

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு போராடும் மக்களுடன் எஸ்டிபிஐ தொடர்ந்து நிற்கும்: மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிவிப்பு

சென்னை: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தில், மக்களுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து நிற்கும் என்று மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிவித்துள்ளார். இதுகுறித்து, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: பரந்தூரில்  விமான நிலையம் அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தில் 13 கிராம மக்கள் இணைந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அறவழி ஜனநாயக போராட்டமானது கடந்த பி.11 அன்று 200 நாட்களை எட்டியுள்ளது. அரசு…

இடைத்தேர்தல் பிரசாரம் செய்ய நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் மேலும் 6 பேர் சேர்ப்பு: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் மேலும் 6 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மேலும் 6 பேர் சேர்க்கப்படுகிறார்கள். அதன்படி, ஜே.எம்.எச். அசன்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பிரபலங்களால் சூடுபிடிக்கும் பிரசாரம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கவுள்ளது. ஜனவரி 18ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், அடுத்த நாளே திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், வீட்டுவசதி துறை அமைச்சருமான சு.முத்துசாமி தலைமையில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுவிட்டது. அதைத் தொடர்ந்து, அதிமுக உள்கட்சி குழப்பம் காரணமாக நீண்ட இழுப்பறிக்கு பின்னர் வேட்பு மனுத் தாக்கலின் இறுதி நாளன்றே…

சொல்லிட்டாங்க…

* மதவெறி கூட்டத்துக்கு விசுவாச அடிமைகளாக தொடர்வதன் மூலம், சொந்த கட்சிக்கே எடப்பாடி முடிவுரை எழுதுகிறார். – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்* அரசு திட்டங்கள் மூலம் தனிநபர்களை முதலீடு செய்ய தூண்ட வேண்டிய அவசியமில்லை. – ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்* மாநில அரசுகளை கவிழ்ப்பதில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நிபுணத்துவம் பெற்றவர்கள். – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே* இந்தியா 5வது பெரிய பொருளாதார நாடாக இருப்பதற்கு அரசு காரணம் இல்லை,…

1 22 23 24 25 26 161