"விஜய் வாழும் வரை முதல்வராக இருப்பார்!"- தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ|Live Updates

Share

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம் ஆனந்தன், கடம்பூர் ராஜூ, எம்.சி சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரும், முன்னாள் எம்எல்ஏக்கள் சிலரும் தவெகவில் இன்று இணைந்திருக்கின்றனர். இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய கடம்பூர் ராஜூ, ” தீய சக்தியை அகற்ற தூய சக்தி தேவை. வாழும் வரை முதல்வராக இருப்பார் விஜய். எங்களை நாங்கள் இந்தக் கழகத்தில் இணைத்துக்கொண்டிருக்கிறோம். எங்களை தவெகவில் இணைத்துக்கொண்ட முதல்வருக்கு நன்றி. 2011 சட்டமன்றத்தில் வாக்குசாவடிகளில் களமிறங்கி நாங்கள் பணியாற்றினோம். அப்போது எங்களுக்கு உறுதுணையாக இருந்தது விஜய் நற்பணிமன்றம் தான் என்பதை நினைவு கூறுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு சென்ற ப.சிதம்பரம்; இடதுசாரிகளைக் கூட்டணிக்குள் இழுக்க முயற்சியா?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சந்திருக்கிறார். இடதுசாரிகளைக் கூட்டணியில் சேர்க்க ப.சிதம்பரம் முயற்சித்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ” இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை குறிப்பாக மாநில செயலாளர் வீரபாண்டியனை மரியாதை நிமித்தமாகத் தான் சந்தித்தேன்” என்றிருக்கிறார்.

வீரபாண்டியன்
வீரபாண்டியன்

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்,, ” தவெக இப்போதுதான் அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதற்கு காலஅவகாசம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சட்டம் ஒழுங்கை உடனடியாக சரிசெய்ய வேண்டும். யாராக இருந்தாலும் ஊடகங்களைப், பத்திரிகைகளைக் கடந்து செல்ல வேண்டும் என்பதை தான் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தும்.

மதசார்பற்ற கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று தான் தவெகவிற்கு ஆதரவு அளிக்கிறோம். இனி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், பற்றி நாளை சிந்திக்கலாம். இப்போது தவெக நல்லாட்சி தர வேண்டும். வெளியில் இருந்து நாங்கள் ஆதரவு தருகிறோம். நாங்கள் இந்தியக் கூட்டணியில் இருக்கிறோம். ஜூன் 8 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் எங்கள் தேசிய தலைவர்கள் அதில் கலந்துகொள்வார்கள். பிரவீன் சக்ரவர்த்தி எங்களை மரியாதையை நிமித்தமாகத் தான் சந்தித்தார். ‘நான் வெளியிட்ட பதிவு தவறுதான். அதை பெரிதாக எடுத்துகொள்ள வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார்” என்று கூறியிருக்கிறார்.

தவெகவில் இணையும் முன்னாள் அமைச்சர்கள்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம் ஆனந்தன், கடம்பூர் ராஜு, எம்.சி சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தவெகவில் இணைவதற்காக பனையூர் சென்றிருக்கின்றனர்.

தவெகவில் ஐக்கியமாகும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்?

உடுமலை ராதாகிருஷ்ணன்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம் ஆனந்தன், கடம்பூர் ராஜு, எம்.சி சம்பத் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதேபோலபாப்பிரெட்டிபட்டி முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி உள்ளிட்ட 11 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட முதற்கட்டமாக 400 பேர் தவெகவில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று போராட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று டெல்லியில் போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்திருக்கிறார்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

‘ஜந்தர் மந்தரில் உங்களை யெல்லாம் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒரு புத்தகத்தையும் நமது மூவர்ணக் கொடியையும் எடுத்து வர மறக்காதீர்கள்!’ என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் அபிஜீத் திப்கே பதிவிட்டிருக்கிறார்.

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா.

நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டனர்.

செஸ் போட்டியின் ஒன்பதாவது சுற்றில் பிரக்ஞானந்தா கறுப்பு நிற காய்களுடனும் குகேஷ் வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள்.

நார்வே செஸ் போட்டி
நார்வே செஸ் போட்டி

இதில் குகேஷ் தனது 34 ஆவது நகர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார். பதக்கம் வெல்லும் போட்டியில் 0.5 புள்ளிகள் பின் தங்கியுள்ள பிரக்ஞானந்தா கடைசிப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

இந்நிலையில் பரபரப்பாக நடந்த 10-வது சுற்றின் முடிவில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை (Vincent Keymer) தோற்கடித்து வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார். இதன் மூலம் நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com