இந்தியாவிடம் பிரமோஸ் ஏவுகணையை வாங்க வியட்நாம், இந்தோனீசியா ஆர்வம் காட்டுவது ஏன்?

Share

பிரமோஸ் ஏவுகணை, இந்தியா, வியட்நாம்,  இந்தோனீசியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வியட்நாமுக்கு பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த ஏவுகணையை விற்பனை செய்வது தொடர்பாக இந்தோனீசியாவுடனான பேச்சுவார்த்தைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. (சித்தரிப்புப் படம்)

    • எழுதியவர், ஷகீல் அக்தர்
    • பதவி, பிபிசி உருது செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

வியட்நாமுக்கு பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஷங்ரி-லா கலந்துரையாடல் (Shangri-La Dialogue) எனும் பாதுகாப்பு உச்சி மாநாட்டின்போது, ​​கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் இதனை தெரிவித்தார்.

இதுதொடர்பாக வியட்நாமுடன் ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்; இருப்பினும், அதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பிரமோஸ் ஏவுகணை (BrahMos) விற்பனை தொடர்பாக இந்தோனீசியாவுடனான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

விற்பனை குறித்து 14 ஆண்டுகள் நீடித்த பேச்சுவார்த்தை

இந்த ஒப்பந்தம் குறித்த இந்தியா மற்றும் வியட்நாம் இடையிலான பேச்சுவார்த்தைகள் 2012-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இந்த ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா சற்று தயக்கம் காட்டியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com