“நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும்.” – ஹர்திக் பாண்டியா | “We should have batted better.” – Hardik Pandya

Share

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 23) எல்-கிளாசிகோ ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்தது. 208 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்தத் தோல்விக்குப் பிறகு மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

தோல்வி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “பவர்-பிளே ஓவர்களிலேயே அந்த விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்குப் பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. அதை எங்களால் ஈடுகட்ட முடியவில்லை. பிட்ச் மாறியது என்று நான் சொல்ல மாட்டேன். சென்னை அணி மிகச்சிறப்பாக பேட்டிங் செய்து 207 ரன்கள் குவித்தனர். இரண்டு அணிகளுக்கும் ஒரே மைதானம், ஒரே விக்கெட் தான். நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும்.

MI - மும்பை இந்தியன்ஸ்

MI – மும்பை இந்தியன்ஸ்

எங்கள் அணியின் ஸ்பின்னர்களும் நன்றாகவே பந்துவீசினர். ஆனால், சஞ்சு சாம்சன் இன்று அசாத்தியமாக விளையாடினார். அதே சமயம், அவர்களின் மற்ற பேட்ஸ்மேன்களும் சீரான பங்களிப்பை அளித்து ஒரு நல்ல ஸ்கோரை எட்ட உதவினர். இந்த இலக்கை நாங்கள் துரத்த வேண்டுமென்றால், ஒரு சிறப்பான பவர்-பிளே மற்றும் மொமெண்டம்  எங்களுக்குத் தேவைப்பட்டது, ஆனால் அது இன்று அமையவில்லை. அணியில் மாற்றங்கள் செய்வது குறித்து இனிமேல் தான் ஆலோசிக்க வேண்டும். அடுத்த சில நாட்களில் எங்குத் தவறு நடந்தது என்பதை ஆராய்ந்து, எதைச் சிறப்பாகச் செய்ய முடியுமோ அதை நோக்கி முன்னேறுவோம்,” என்று ஹர்திக் பாண்டியா பேசினார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com