‘சாய் சுதர்ஷன் சதம் வீண்’ – கோலி அதிரடியால் பெங்களூரு வென்றது எப்படி?

Share

விராட் கோலி அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி

பட மூலாதாரம், ANI

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 34வது லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.

இந்தப் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த சீசன் இந்த மைதானத்தில் ஆர்சிபி விளையாடிய கடைசி ஹோம் லீக் போட்டி இது. அந்த அணியின் மற்ற ஹோம் ஆட்டங்கள் ராய்ப்பூரில் நடைபெறும். இந்நிலையில் சின்னசாமியில் இந்த சீசனை வெற்றியோடு முடித்திருக்கிறது ஆர்சிபி.

டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அந்த அணியின் ஓப்பனர் ஃபில் சால்ட் காயமடைந்ததால், அவருக்குப் பதில் ஜேக்கப் பெதெல் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஜேசன் ஹோல்டர் மற்றும் மானவ் சூதர் சேர்க்கப்பட்டனர்.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. தமிழ்நாடு பேட்டர் சாய் சுதர்ஷன் சதம் அடித்தார்.

அடுத்து விளையாடிய ஆர்சிபி அணி 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. அந்த அணி பேட்டர்களில் அதிகபட்சமாக விராட் கோலி 81 ரன்கள் எடுத்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com