KKR vs DC: “கேப்டனாக இந்த ஐபிஎல் எனக்கு ஒரு பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்தது”- அக்சர் படேல் | akshar patel about his captain

Share

ஐபில் தொடரின் கடைசி லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் நேற்று (மே24) மோதின.

இந்த கடைசி போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஒரு ஆறுதல் வெற்றியின் மூலம் 6-வது இடத்தில் தொடரை முடித்துள்ளது டெல்லி அணி.

போட்டிக்கு பின்னர் பேசிய டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல், “கடைசி மூன்று போட்டிகளில் நாங்கள் விளையாடிய விதம் எனக்கு பெருமை அளிக்கிறது.

சூழ்நிலைகள் எங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும், அணி கடைசி வரை போராடியது. பலர் நாங்கள் எளிதில் கைவிட்டுவிடுவோம் என்று நினைத்தார்கள். ஆனால் வீரர்கள் அதனை செய்யவில்லை.

இந்த சீசனில் நாங்கள் செய்த தவறுகளை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகே எதை மேம்படுத்த வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஒரே ஒரு போட்டி மட்டும் வேறு விதமாக முடிந்திருந்தால், இன்று நம்மைப் பற்றிய பேச்சே மாறியிருக்கும். முக்கியமான நேரங்களில் கேட்ச்களை தவறவிட்டது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com