CSK: இந்த ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட யோசிப்பது ஏன்? |CSK: Why is Dhoni contemplating playing in this IPL?

Share

ஐபிஎல் தொடரின் பரபரப்பான கட்டத்தில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்தப் போட்டியில் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் “தல’ தோனி களமிறங்குவாரா என்பதன் மீதே உள்ளது.

சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 103 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற CSK, மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. சஞ்சு சாம்சனின் அதிரடி சதம் மற்றும் பந்துவீச்சாளர்களின் துல்லியமான செயல்பாட்டால் மும்பையை வீழ்த்திய சென்னை அணி, தற்போது புள்ளிப்பட்டியலில் வலுவான நிலையில் உள்ளது.

சிஎஸ்கே வீரர்கள்

சிஎஸ்கே வீரர்கள்

தோனியின் வருகை குறித்துப் பேசிய பயிற்சியாளர் மைக் ஹசி, “தோனி மிக வேகமாக மீண்டு வருகிறார். வலைப்பயிற்சியில் அவர் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். ஆனால், விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் அவர் 100 சதவீதம் தகுதியை எட்ட வேண்டும் என்று காத்திருக்கிறோம். இன்னும் சில போட்டிகளில் அவர் விளையாடுவார் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com