‘பௌலிங், பீல்டிங் ரெண்டுமே மோசம்தான்!’ – தோல்வி குறித்து அக்சர் படேல் |“Bowling & Fielding Let Us Down” – Axar Patel Reacts After Loss

Share

பந்துவீச்சாளர்களுக்கு நாங்கள் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதே உண்மை.அதே சமயம், எங்கள் பந்துவீச்சுப் பிரிவையும் நாங்கள் கவனிக்க வேண்டும். பவர்-பிளேயில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசிய விதம் மற்றும் பீல்டிங்கில் நாங்கள் செய்த தவறுகளே இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணங்கள். இந்த விக்கெட்டில் 264 ரன்கள் என்பது மிகப்பெரிய ஸ்கோர். ஐபிஎல் வரலாற்றில் இது ஒரு சாதனை ஸ்கோர் என்பது எங்களுக்கு ஒரு பாசிட்டிவான விஷயம் தான்.

கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்து, நாங்கள் கேட்சுகளைச் சரியாகப் பிடித்திருந்தால், எங்களால் வரிசையாக இரண்டு மூன்று போட்டிகளை வென்றிருக்க முடியும். முக்கியமான தருணங்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தால் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக அமைந்திருக்கும். ஆனால், ஒவ்வொரு முறையும் ஒரே தவறையே நாங்கள் மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருக்கிறோம். நாங்கள் மீண்டும் சென்று எங்குத் தவறு நடந்தது என்பதை ஆராய்வோம்,” என்று அக்சர் படேல் பேசினார்

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com