Browsing: விளையாட்டு

FIFA WC 2022 | கால் இறுதியில் நுழையப் போவது யார்? – பிரேசில் அணியுடன் தென் கொரியா பலப்பரீட்சை | Who will enter the quarter – finals?

தோகா: கத்தாரில் நடைபெறும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று பிரேசில், தென் கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த ஆட்டம் தோகாவிலுள்ள ஸ்டேடிடம் 974-ல் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது. குரூப் சுற்று ஆட்டங்களில் பிரேசில் அணி செர்பியா, சுவிட்சர்லாந்து அணிகளை வீழ்த்தியிருந்தது. ஆனால் அதே நேரத்தில் கேமரூனிடம் தோல்வி கண்டிருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர்நெய்மர் காயமடைந்து ஓய்வில் உள்ளார். அவர் இந்த ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகம் என்று தெரியவந்துள்ளது. அதே நேரத்தில்…

போலந்து அணியை வெளியேற்றி காலிறுதிக்குள் கால்பதித்த பிரான்ஸ்!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போலந்து அணியை வெளியேற்றி, உலகக் சாம்பியனான பிரான்ஸ் அணி, காலிறுதிக்குள் கால் பதித்தது.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியின் கடைசிக் கட்டத்தில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் எம்பாப்பே தட்டிக் கொடுத்த பந்தை, சக வீரர் ஆலிவர் ஜிரவுடு கோல் அடித்து அசத்தினார். 74-வது நிமிடத்தில் உஸ்மான் டெம்பெலி கடத்திக் கொடுத்த பந்தை, எம்பாப்பே மின்னல் வேகத்தில் போலந்து கோல்கம்பத்திற்குள் தள்ளி, அரங்கத்தை அதிர வைத்தார்.பிரதான நேரமான 90 நிமிடங்கள் முடிந்த…

Messi: `மெஸ்ஸி என்கிற வீரன்’ – ஆயிரம் போட்டிகளும் அடுக்கடுக்கான சாதனைகளும்! | Messi’s Performance and Records in WorldCup

முதல் பாதியிலேயே அர்ஜெண்டினா முன்னிலையை பெற்றது. அந்த முன்னிலையை பெற்றுக் கொடுத்ததே மெஸ்ஸிதான். 35 வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் தற்காப்பு வளையத்தை உடைத்தெறிந்து ஆஸ்திரேலிய கீப்பர் ரியானை லாவகமாக ஏமாற்றி எளிதாக கோல் அடித்திருந்தார் மெஸ்ஸி. இந்த ஒரு கோல் மட்டுமில்லை, கோல் இல்லையென்றாலும் இரண்டாம் பாதியிலும் மெஸ்ஸியின் ஆட்டம் இன்னும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருந்தது. லாங் ட்ரிபிள்களை செய்து ஆஸ்திரேலிய டிஃபண்டர்களை திணறடித்து கோலை நோக்கி அட்டாக் செய்து கொண்டே இருந்தார். அற்புதமான அசிஸ்ட்களையும் செய்திருந்தார்.…

FIFA WC 2022 | முத்தான மூன்று கோல்: போலந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ் | fifa wc france scores 3 goals against poland enters in quarter finals

அல் துமானா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் போலந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது பிரான்ஸ் அணி. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது நடப்பு சாம்பியனான அந்த அணி. கத்தார் நாட்டின் அல் துமானா பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் சரிசமமான பலத்துடன் வெற்றிக்காக பலப்பரீட்சை செய்தன. இருந்தாலும் அதில் பிரான்ஸ் அணிக்கே வெற்றி கிடைத்தது.…

INd vs Ban | கே.எல்.ராகுல் மிஸ் செய்த இந்த ஒரு கேட்ச்… இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக விக்கெட் கீப்பர் ராகுல் விட்ட கேட்ச் பார்க்கபடுவதால் அவரை ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர்.வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கும் இடையே மிர்புரில் இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 41.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டைகளையும் இழந்து 186 ரன்களை எடுத்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் பின்வரிசையில்…

Tamil Thalaivas : ஆல் அவுட்…சூப்பர் டேக்கிள்…சூப்பர் 20; அசத்திய அஜிங்கியா பவார்!|Tamil Thalaivas : Ajinkya Pawar’s stunning Super 20

ஆல் அவுட் ஆகும் நிலையில் இருந்த தமிழ் தலைவாஸ் அணியைக் காப்பாற்றி மிகப்பெரிய புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளார் அஜிங்கியா பவார். கடைசி வரை ஆட்டம் இழக்காமல் ஒரே ரெய்டில் 5 புள்ளிகள் எடுத்து அதிரடி நிகழ்த்தினார். ஏற்கனவே தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோதும் போது ஒரே ரெய்டில் 6 புள்ளிகள் எடுத்து அசத்தியிருந்தார். கடைசி நேரத்தில் அஜிங்கியா பவாரின் சிறப்பான ஆட்டத்தினால் அந்தப் போட்டியிலும் தமிழ் தலைவாஸ் வென்றிருந்தது. ஒருமுறை கூட ரெய்டில் பிடிபடாமல்…

FIFA WC 2022 | மரடோனாவின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி – அர்ஜென்டினா காலிறுதிக்கு தகுதி | FIFA WC 2022 | Messi breaks Diego Maradona record – Argentina qualify for quarter-finals

தோகா: கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படுபவர் டியாகோ மரடோனாவின் சாதனையை முறியடித்துள்ளார் சக நாட்டு வீரர் லியோனல் மெஸ்ஸி. அர்ஜென்டினா அணி சார்பில் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார் மரடோனா. இந்த சாதனையை கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது முயறியடித்தார் மெஸ்ஸி. நள்ளிரவு நடந்த ஆட்டத்தில், அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி 35-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன்மூலம் உலக கோப்பையில் 9 கோல்களை (22 ஆட்டம்)…

Ind vs Ban Live Streaming | ஒரு நாள் போட்டிக்கான நேரம், இடம் & நேரலையில் எப்படி பாரக்கலாம்?

இந்தியா – வங்கதேசம் இடையே நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான, வெற்றிக் கோப்பையை இரு அணி கேப்டன்களும் அறிமுகம் செய்து வைத்தனர். நன்றி

பயிற்சியின்போது முகமது ஷமிக்கு ஏற்பட்ட காயம்; உம்ரான் மாலிக்கை மாற்று வீரராக அறிவித்த பிசிசிஐ! | Umran Malik Replaces Injured Pacer Mohammed Shami In India’s ODI Squad vs Bangladesh

வங்கதேசம் செல்லும் இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் முதலாவது ஒரு நாள் போட்டி நாளை (4.11.2022) நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள், டிசம்பர் 1-ம் தேதியே வங்கதேசம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக்கோப்பைக்கு பின் ஓய்விலிருந்த முகமது ஷமி தற்போது நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பதற்காகப் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவருக்குக் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.இந்திய…

FIFA WC 2022 | அட்டகாசமான மேட்ச்… செர்பியாவை வீழ்த்தி நாக் – அவுட் சுற்றில் சுவிட்சர்லாந்து! | FIFA WC 2022 | Stupendous match.. Switzerland beats Serbia to step into knock out round

கத்தார் உலகக்கோப்பை ஏற்கெனவே பல அற்புதமான போட்டிகளை முதல் சுற்றிலேயே கண்டு விட்டது, இன்று அதிகாலை நடந்த சுவிட்ஸர்லாந்து-செர்பியா மேட்ச் முத்தாய்ப்பான ஒரு போட்டியாக அமைந்தது. இதில் சுவிட்சர்லாந்து அணி செர்பியாவை 3-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி வென்று இறுதி-16 சுற்றுக்குத் தகுதி பெற்று அங்கு போர்ச்சுகலைச் சந்திக்கின்றது. அங்குதான் போர்ச்சுகலுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் காத்திருக்கிறது. 20-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ஹெர்தான் ஷகீரி முதல் கோலை அடிக்க 26வது நிமிடத்தில் செர்பியா வீரர் அலெக்சாண்டர்…

1 337 338 339 340 341 444