Browsing: விளையாட்டு

கத்தார் உலகக்கோப்பையின் நேற்றைய தினத்தின் சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு! | FIFA WorldCup Round Up 2022 about Ronaldo’s upset

போர்ச்சுக்கல் Vs சுவிட்சர்லாந்து இடையேயான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் கொன்ஸாலோ ராமோஸ் எனும் 21 வயதே ஆன வீரர் ஹாட்ரிக் கோல்களை அடித்திருந்தார். உலகக்கோப்பையின் நாக் அவுட் போட்டியில் பிரேசிலின் பீலேவிற்கு பிறகு ஹாட்ரிக் கோல்கள் அடித்த இளம் வீரர் எனும் பெருமையையும் பெற்றிருக்கிறார். சர்வதேச அளவில் வெறும் 35 நிமிட அனுபவம் மட்டுமே கொண்ட ராமோஸூக்காகத்தான் நேற்றைய போட்டியில் போர்ச்சுக்கலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டார். இதனால் ரொனால்டோ கொஞ்சம்…

FIFA WC 2022 | போர்ச்சுகல் அணியின் புதிய ஹீரோ – 21 வயது வீரரின் ஹாட்ரிக் கோல் மழையால் காலிறுதிக்கு முன்னேற்றம் | Cristiano Ronaldos replacement, Goncalo Ramos, scores stunning hat-trick on his FIFA World Cup debut

லுசைல்: சுவிட்சர்லாந்து அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது போர்ச்சுக்கல் அணி. கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று போர்ச்சுகல் – சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த இப்போட்டியில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடவில்லை. அவருக்கு மாற்றாக, 21 வயது வீரர் கோன்கலோ ராமோஸ் அறிமுக வீரராக களம்கண்டார். ஆட்டம் ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் வசம்…

டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுக்கப்பட்ட ஓவர்… வைரலாகும் பும்ரா வீடியோ

டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட மேட்ச்சின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் ஸ்டூவர்ட் பிராடின் ஒவரை இந்திய அணியின் பந்து வீச்சாளர் பும்ரா விளாசித் தள்ளியுள்ளார்.டெஸ்ட் போட்டிகள் பொதுவாக நிதானமான ஆட்டத்திற்கு பெயர்போனது. தற்போது 20 ஓவர் போட்டிகளின் ஆதிக்கத்தால், முன்பை விடவும் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் சற்று அதிரடியாக ஆடத் தொடங்கியுள்ளனர்.டெஸ்டில் கடைசி விக்கெட்டுகள் களத்தில் இருக்கும்போது, பேட்ஸ்மேன் அதிரடி ஆட்டத்தை விளையாடுவார். கடைசி விக்கெட்டுகள் எளிதில்…

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்தியா vs பாகிஸ்தான் போட்டி தேவை: ரமிஸ் ராசா | test cricket needs india versus pakistan pcb chief ramis raza

ராவல்பிண்டி: டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி தேவைப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராசா தெரிவித்துள்ளார். முன்னதாக, அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கவில்லை என்றால் தங்கள் அணி இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்காது என அவர் சொல்லி இருந்தார். இந்த சூழலில் இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து பேசியுள்ளார். அதே நேரத்தில் முன்பு அவர் சொல்லிய கருத்தையும் மாற்றி…

FIFA World Cup 2022 Round Up : எம்பாப்பேயின் அசுர வேகம் முதல் ஆஸ்திரேலிய கோச்சின் ஆதங்கம் வரை! |FIFA World Cup 2022 Round Up 6-12-2022

1. நேற்று, நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணியும் போலந்து அணியும் அல் துமாமா மைதானத்தில் மோதின. இந்த ஆட்டத்தில், பிரான்ஸ் அணி அதிரடியாக விளையாடியது. பிரான்ஸ் அணி வீரர் ஒலிவியே ஜிரூ 44 ஆவது ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே 74 ஆவது நிமிடத்திலும், 91 ஆவது நிமிடத்திலும் கோலடித்து அசத்தினார். ஆட்டத்தின் முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. ஒலிவியே ஜிரூ…

FIFA WC 2022 | கோல் மழை பொழிந்த பிரேசில் வீரர்கள் – தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றம்

தோகா: கத்தாரில் நடைபெறும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று பிரேசில், தென் கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டம் தோகாவிலுள்ள ஸ்டேடிடம் 974-ல் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது. காயத்தால் ஓய்வில் இருந்த பிரேசில் அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் நெய்மர் இப்போட்டியில் களம்கண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே பிரேசில் அதிரடியை கையாண்டது. சொல்லப்போனால் கோல் மழை பொழிந்தனர் எனலாம். முதல் கோலை வினி ஜூனியர் அடித்தார். அவர் ஆட்டத்தின் 7வது…

FIFA World Cup Qatar 2022: அவதிப்பட்ட ரஷ்யா; பாடம் கற்ற கத்தார்; ஸ்டேடியம் 974 உருவான பின்னணி! |Story about FIFA World Cup stadium 974 in qatar

இதை எல்லாம் கருத்தில் கொண்டு சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கா வண்ணம் கட்டப்பட்டது தான் இந்த கத்தார் ரீமூவபிள் ஸ்டேடியம். ’ஸ்டேடியம் 974’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் மொத்தம் 40,000 இருக்கைகள் உள்ளன. 974 பழைய ஷிப்பிங் கண்டேய்னர்களை உபயோகித்து வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த பெயர் வைத்துள்ளனர்.  Qatar removable stadium Qatar 2022இந்த விளையாட்டு அரங்கம், உலகக்கோப்பை போட்டிக்குப் பின், ஒவ்வொன்றாகக் கழற்றப்பட்டு இடம் மாற்றப்படும் என்றும் சில பாகங்கள் மக்கள் பொழுதுபோக்குக்காகவும், சிறு தொழில்களுக்காகவும் பயன்படுத்தப்படும்…

FIFA WC 2022 | கால் இறுதியில் நுழையப் போவது யார்? – பிரேசில் அணியுடன் தென் கொரியா பலப்பரீட்சை | Who will enter the quarter – finals?

தோகா: கத்தாரில் நடைபெறும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று பிரேசில், தென் கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த ஆட்டம் தோகாவிலுள்ள ஸ்டேடிடம் 974-ல் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது. குரூப் சுற்று ஆட்டங்களில் பிரேசில் அணி செர்பியா, சுவிட்சர்லாந்து அணிகளை வீழ்த்தியிருந்தது. ஆனால் அதே நேரத்தில் கேமரூனிடம் தோல்வி கண்டிருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர்நெய்மர் காயமடைந்து ஓய்வில் உள்ளார். அவர் இந்த ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகம் என்று தெரியவந்துள்ளது. அதே நேரத்தில்…

1 336 337 338 339 340 444