Browsing: விளையாட்டு

சரசரவென கூடிய 50 லட்சம் ரசிகர்கள்.. அர்ஜெண்டினா பஸ்ஸுக்குள் குதித்த ரசிகர்.. ஹெலிகாப்டரில் தப்பிய மெஸ்ஸி..

அர்ஜென்டினா கால்பந்து அணி வீரர்களின் வெற்றி கொண்டாட்ட பேரணியில் பல லட்சக்கணக்கானோர் குவிந்த நிலையில், மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்கள் ஹெலிகாப்டரில் அப்புறப்படுத்தப்பட்டனர்.ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய அர்ஜென்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து திறந்த பேருந்தில் மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்கள் பயணித்த நிலையில், வழி நெடுகிலும் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.Lionel #Messi and team were evacuated in helicopters after…

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா? | Hardik Pandya likely to get India white-ball captaincy in near future says bcci sources

2023 கிரிக்கெட் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. அதற்குள் ஒரு நிலையான 12-14 வீரர்களை தயார் படுத்தும் முயற்சியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளது. இதனொரு பகுதியாக இந்திய அணியின் ஒயிட் பால் கேப்டனாக எதிர்காலத்தில் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) சமீப காலமாக இந்த யோசனை பரிசீலித்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த யோசனையை பிசிசிஐ அதிகாரிகள் ஹர்திக் பாண்டியாவிடம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் ஹர்திக் முடிவெடுக்க சிலநாட்கள்…

ரஞ்சி தொடரில் இரட்டை சதம் விளாசி ரஹானே அசத்தல்… இந்திய அணியில் மீண்டும் வர ரசிகர்கள் ஆதரவு

தற்போது நடப்பு உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் இடம்பெறுவதற்கான கவனத்தை ஈர்க்கும் முக்கிய தொடராக ரஞ்சி கோப்பை இருந்து வருகிறது. ரஞ்சி தொடரில் அர்ஜூன் டெண்டுல்கர், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்துள்ளனர். இவர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரஹானே இரட்டை சதம் அடித்து அசத்தி உள்ளார்.மும்பை அணியின் கேப்டன் ரஹானே ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 261 பந்துகளில் 201 ரன்கள்…

Harry Brook: `எண்ணிலடங்கா சதங்கள் வேண்டும்!' – சாதித்துக் காட்டும் இங்கிலாந்தின் ஹிட் மேன் ப்ரூக்!

மூன்று ஃபார்மட்களிலும் ஆடக்கூடியவர்களே அரியவகையினராக மாறிவரும் காலகட்டத்தில், அப்படியொரு இணையற்ற ஏலியனாக இங்கிலாந்துக்குக் கிடைத்திருக்கிறார் ஹாரி ப்ரூக். “மார்கனின் இடத்தை நிரப்ப வந்திருக்கும் 360° வீரர்” என பீட்டர்சன் புகழாரம் சூட்டுகிறார், “இன்னுமொரு கோலியாக வருவார் பாருங்கள்” என ஸ்டோக்ஸ் இவரைக் கொண்டாடுகிறார். “டெஸ்டில் அடுத்த அலிஸ்டர் குக்”, என இங்கிலாந்து பத்திரிக்கைகள் பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றன. அனைவரது ரேடார் பார்வைக்குள்ளும் சிக்கியிருக்கும் ப்ரூக் யார்?! அப்படியென்ன ஸ்பெஷல் அவரிடம்? பாகிஸ்தானைப் புரட்டிப் போட்டு டெஸ்ட் தொடரை…

அர்ஜெண்டினா வெற்றி பெற்றதால் இலவசமாக தேநீர் வழங்கிய கொல்கத்தா பெண் | Calcutta woman who offered free tea because Argentina won

கொல்கத்தா: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து கொல்கத்தாவில் தேநீர்கடை நடத்தி வரும் பெண் ஒருவர், ரசிகர்களுக்கு இலவசமாக தேநீர்வழங்கி உள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன. கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. அர்ஜெண்டினா – பிரான்ஸ் அணிகள் மோதிய இந்தஇறுதி ஆட்டம் பார்வையாளர்களுக்கு ஒவ்வொரு நொடியும் உற்சாகத்தை கொடுத்தது. சுமார்மூன்று மணிநேரம் நீடித்த பரபரப்பான ஆட்டத்தில்…

வீரர்களை ஏலத்தில் எடுக்க ஐபிஎல் அணிகளிடம் மீதம் உள்ள தொகை எவ்வளவு தெரியுமா?

ஐ.பி.எல் மினி ஏலம் வரும் வெள்ளியன்று நடைபெறும் நிலையில், வீரர்களை ஏலத்தில் எடுக்க ஒவ்வொரு அணியிலும் எவ்வளவு தொகை உள்ளது என்பதை, இந்த பதிவில் பார்க்கலாம்.16ஆவது ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது.இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.…

ARGvsFRA | Mbappe -க்கு Argentina போட்ட Sketch! Mbappe -யின் எழுச்சி! |Video | Decoding Argentina’s Worldcup victory against France

Published:20 Dec 2022 1 PMUpdated:20 Dec 2022 1 PMஎம்பாப்பேயின் அசுர வேக ஆட்டத்தை கடந்து அர்ஜெண்டினா இறுதிப்போட்டியை வென்றது எப்படி? இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. நன்றி

ஆஸ்திரேலியாவின் காபா ஆடுகளம் ‘சராசரிக்கும் கீழ்’ என ஐசிசி மதிப்பீடு | icc rates cricket australia s gaba pitch as below average

துபாய்: தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி அண்மையில் காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி இரண்டு நாட்களுக்குள் நடந்து முடிந்தது. அதனால், காபா மைதானத்தின் ஆடுகளத்தை பலரும் விமர்சித்திருந்தனர். இந்தச் சூழலில் காபா மைதானத்தின் ஆடுகளம் சராசரிக்கும் கீழ் என்ற ரேட்டிங்கை பெற்றிருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் 3…

பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் அடித்த இங்கிலாந்து… 3ஆவது டெஸ்டிலும் வெற்றி…

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதுஇங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 ஓவர் போட்டி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளது. 7 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.இதன்பின்னர் தற்போது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வந்தன. முதல் மற்றும் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி…

1 329 330 331 332 333 444