Browsing: விளையாட்டு

மனைவி அனுஷ்கா சர்மாவுடன் புத்தாண்டை கொண்டாடிய விராட் கோலி… 6 மில்லியன் லைக்ஸ் குவிந்தது…

கிரிக்கெட் வீரர் விராட் கோலி புத்தாண்டை தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் புகைப்படங்களுக்கு 6 மில்லியன் லைக்ஸ்கள் குவிந்துள்ளன. விராட் கோலியைப் போன்று பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் புத்தாண்டை கொண்டாடி புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். விராட் கோலிக்கு கடந்த ஆண்டு முக்கியமான ஆண்டாக அமைந்தது. முந்தைய ஆண்டுகளில் அவர் சதம் அடிப்பதற்கு தடுமாறி வந்தார்.1,020 நாட்களுக்கு பின்னர் ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவர் சதம் அடித்து பின்னடைவை…

ரொனால்டோவை ரூ.1,775 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது சவுதி அரேபியா கிளப் | Saudi Arabia club signed Ronaldo for Rs 1,775 crore

ரியாத்: போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை ரூ.1,775 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது சவுதி அரேபியாவில் உள்ள அல் நசர் கிளப். 37 வயதான ரொனால்டோ இந்த கிளப்புக்காக 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ரொனால்டோ கூறும்போது, “சவுதி அரேபியாவில் புதிய கால்பந்து லீக்கில் விளையாட உள்ளேன். அல் நசர் கிளப்பின்தொலைநோக்கு பார்வையும், செயலும் மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. இந்த கிளப்பில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அணி மிகப்பெரிய…

சைமண்ட்ஸ் முதல் ரிஷப் பண்ட் வரை.. கார் விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர்கள்!

இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் கடந்த 29ஆம் தேதி அதிகாலை டெல்லியில் மோசமான கார் விபத்தில் சிக்கினார். அதில் தலையில் காயம், முதுகில் சிராய்ப்புகள் ஏற்பட்ட நிலையில், கார் முற்றிலும் எரிந்து நாசமானது. தற்போது ரிஷப் பந்த் சிகிச்சையில் இருந்து வருகிறார். கிரிக்கெட் வீரர்கள் விபத்தில் சிக்கிய சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளன. ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் முதல் பட்டோடி வரை ஆபத்தான கார் விபத்துகளில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலைப் பார்ப்போம்.…

ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் – ரிஷப் பந்த் உடல்நிலை குறித்த வெளியான தகவல் | Report says Substantial Improvement In Rishabh Pants Condition After Crash

டேராடூன்: விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் டெல்லியிலிருந்து உத்தராகண்ட்டிற்கு தன் காரில் செல்லும்போது கோரமான விபத்தில் சிக்கினார். தனது மெர்சிடஸ் காரை ஓட்டிக் கொண்டு உத்தராகண்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ரூர்கி அருகே அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலைத் தடுப்பில் மோதித்…

‘உலகக்கோப்பை வருகிறது… ஓய்வு நாட்களை எதிர்பார்க்காதீர்கள்…’ – விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு கவுதம் காம்பீர் அட்வைஸ்…

உலகக்கோப்பை வரவுள்ளதால் ஓய்வு நாட்களை எதிர்பார்க்காதீர்கள், என்று விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அட்வைஸ் செய்துள்ளார். ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. இதையொட்டி தொடர்ச்சியான ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. வங்கதேச சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டுள்ள இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிரான தொடரை உள்ளூரில் விளையாடவுள்ளது. இதன்பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது.உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு தயாராகும்…

Cristiano Ronaldo: சவுதி அரேபியா கிளப் ஒன்றில் இணைந்த ரொனால்டோ – ஒரு வருடச் சம்பளம் இத்தனை கோடிகளா? | Ronaldo signs deal with Saudi club, becomes highest-paid footballer ever

இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல் நஸர் (AI Nassar) என்ற கிளப் அணியில் இணைந்து விளையாட இரண்டரை வருடங்களுக்குப் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வருடத்துக்கு 177 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் 1770 கோடி) சம்பளத்துக்கு ரொனால்டோவை அல் நஸர் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது.கிறிஸ்டியானோ ரொனால்டோஇதுதொடர்பாக அல் நஸர் கிளப் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றும் பகிரப்பட்டுள்ளது. அப்பதிவில், “இந்த ஒப்பந்தம் எங்கள் கிளப் மட்டுமின்றி, எங்கள் நாடு மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கே சாதனைக்கான உந்து சக்தியைத்…

விடைபெற்றார் கால்பந்தின் அரசன் பீலே | Farewell to the king of football, Pele

சாவோ பாவ்லோ: மூன்று முறை உலகக் கோப்பைகளை வென்று சாதனை படைத்த பிரேசில் கால்பந்து அரசனும், கடந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் திகழ்ந்த ஜாம்பவான் பீலே நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 82. கால்பந்து விளையாட்டை கலையாக மாற்றி வெகுஜன ரசிகர்களை மயங்க வைத்த பீலே, கடந்த 2021-ம் ஆண்டு முதல் பெருங்குடல் புற்றுநோய்க்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். கடந்த ஒரு மாதமாக பல்வேறு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

‘இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவோம்’ – டேவிட் வார்னர் நம்பிக்கை

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவோம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் மற்றும் 2ஆவது டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து 3ஆவது டெஸ்ட் போட்டி ஜனவரி 4ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதன்பின்னர் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய…

கால்பந்து உலகில் பீலே ஏன் அரசன்? – 1000 கோல்கள்; 3 உலகக்கோப்பைகள்; மகத்தான சாதனைகள் – ஒரு பார்வை| Records of Football Legend Pele

1. 1958 ஆம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பைத் தொடர் ஸ்வீடன் நாட்டில் நடைபெற்றது. இதில் வேல்ஸ் அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில், பிரேசில் அணிக்காக விளையாடி உலகக்கோப்பையில் தனது முதல் கோலை பதிவு செய்தார். அப்போது பீலேவுக்கு வயது 17 ஆண்டுகள் 239 நாட்கள் மட்டுமே. உலகக் கோப்பை வரலாற்றில் இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை பீலே படைத்தார்.2. அதே 1958 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணிக்கு…

1 324 325 326 327 328 444