Browsing: விளையாட்டு

அசத்துமா இந்திய அணி.? இன்று தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்.. பலம் பலவீனம் என்ன?

இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து, மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி, அசாம் மாநிலம், கவுகாத்தியில், இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.இந்திய அணியைப் பொறுத்தவரை, காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள கேப்டன் ரோஹித் சர்மா, டி-20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிந்த விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். மேலும், ஷுப்மன் கில், சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா…

தினமும் 24 முட்டைகள் சாப்பிடுவேன்: தனது டயட் ரகசியத்தை பகிர்ந்த பாகிஸ்தான் பவுலர் ஹரிஸ் ரவூப் | i eat 24 eggs daily pakistan bowler haris rauf shares his diet secret

Last Updated : 09 Jan, 2023 09:49 PM Published : 09 Jan 2023 09:49 PM Last Updated : 09 Jan 2023 09:49 PM ஹரிஸ் ரவூப் | கோப்புப்படம் லாகூர்: தினமும் 24 முட்டைகள் சாப்பிடுவேன் என தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப். பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் என மூன்று பார்மெட்…

இந்தியா – இலங்கை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்… போட்டியை டிவி, ஆன்லைனில் எப்படி பார்க்கலாம்?

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகிறது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட அணி இலங்கையை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை வென்றது.இந்திய அணியில் அக்சர் படேல், சூர்ய குமார் யாதவ், ஷிவம் மாவி, ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக் ஆகியோர் சிறப்பான…

Sarfaraz Ahmed: `சொல் அல்ல செயல்!' – காத்திருத்தலின் வலியோடு கர்ஜித்த சர்ஃப்ராஸ்!

நான்காண்டுகள் கழித்து டெஸ்ட் களத்தில் கால்பதித்து, கம்பேக் சீசனிலேயே தொடர்நாயகனாக மிடுக்குடன் மிளிர்கிறார், பாகிஸ்தானின் சர்ஃப்ராஸ் அஹ்மத்.வருடக்கணக்காக முதல் வாய்ப்புக்காகக் காத்திருப்பது ஒருவிதமான வலியென்றால், கையில் கிடைத்த வாய்ப்பின் பிடி கொஞ்சம்கொஞ்சமாக நழுவுவது உயிர் ஊசலாடுவதற்கு ஒப்பான வலி.அத்தகைய பெரும்வலிதான் ஆண்டுக்கணக்காக பாகிஸ்தானின் சர்ஃப்ராஸை ஆக்கிரமித்திருந்தது. மத்திய வரிசையில் அணியைத் தாங்கிப்பிடித்தவர், எத்தனையோ இக்கட்டான நிலையிலிருந்து வீரராகவும், கேப்டனாகவும் அணியை மீட்டெடுத்தவர் என்பதையெல்லாம் தாண்டி, 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை அணியின் கையிலேந்த வைத்தவர் என்பதால் சகவீரர்கள்…

ஆஸி. ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா விலகல் | australian open tennis naomi osaka withdraws

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா விலகியுள்ளார். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 16-ம்தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை நவோமி ஒசாகா பங்கேற்கவிருந்தார். ஆனால் திடீரென போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். விலகலுக்கான காரணத்தையும் அவர் அறிவிக்கவில்லை. நவோமி விலகல் தொடர்பான அறிவிப்பை ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்குழு…

‘கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் எண்ணம் இல்லை’ – ஆஸி. உடனான படுதோல்விக்கு பின்னர் தென்னாப்பிரிக்காவின் டீன் எல்கர் பேட்டி

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் எண்ணம் இல்லை என்று தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி படுதோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக மாட்டேன் என்று எல்கர் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அதிக நெருக்கடி இருந்தது. இருப்பினும், அதனை ஏற்றுக் கொண்டு செயல்படுகிறேன். எனக்கு…

துபாய் டென்னிஸ் தொடருடன் ஓய்வு பெற சானியா முடிவு | Sania Mirza decides to retire from Dubai Tennis Series

புதுடெல்லி: வரும் பிப்ரவரி மாதம் துபாயில் நடைபெற உள்ள துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடருடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா முடிவு செய்துள்ளார். ஓய்வு முடிவை மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பிடம் சானியா தெரிவித்துள்ளார். 36 வயதான சானியா மிர்சா கடந்த ஆண்டு இறுதியுடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார். ஆனால் முழங்கை காயம் காரணமாக சானியா மிர்சா, அமெரிக்க ஓபன் தொடரில்…

‘ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் நயோமி ஒசாகா பங்கேற்க மாட்டார்’ – போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் முன்னணி வீராங்கனையான, ஜப்பானை சேர்ந்த நயோமி ஒசாகா பங்கேற்கவில்லை என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய ஓபன் தொடர், வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. இதிலிருந்து விலகியதற்கான காரணத்தை ஒசாகா தரப்பு தெரிவிக்கவில்லை என்று ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் தொடரில் வீனஸ் வில்லியம்ஸ், ஆடவர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரர்  கார்லஸ் அல்கராஸ் ஆகியோரும்  விலகியுள்ளதால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டித்…

`சமகால சாணக்கியர்’ – கம்பீரின் ஆழமான `கிரிக்கெட்’ விமர்சனங்களும் நம் கண்மூடித்தனமான புறக்கணிப்பும்! | The Importance of Gautam Gambhir’s Cricket Criticisms

`இந்தியக் கிரிக்கெட் உலகின் சமகால சாணக்கியர்’ என்ற வரையறைக்குள் பொருந்திப் போகக்கூடியவர் கௌதம் கம்பீர்.மூன்று ஃபார்மேட்களிலும் முத்திரை பதித்தவர், முத்தாய்ப்பாக 2007 மற்றும் 2011 ஆகிய இரு உலகக்கோப்பைகளை இந்தியா முத்தமிடுவதற்கு முக்கியப் பங்காற்றியவர், இரு ஐபிஎல் கோப்பைகளை கொல்கத்தாவை ஏந்த வைத்த இணையற்ற கேப்டன் என அவர் எட்டிய சாதனைகள் எத்தனையோ!இருப்பினும் இவை மட்டுமே அவரது சிறப்பம்சங்கள் அல்ல. இப்பதங்களையும் தாண்டி கம்பீரை முன்னாள் வீரர்களில் முன்னிலைப்படுத்துவது கிரிக்கெட் குறித்த அவரது ஆழமான கருத்துக்களும், விஷய…

சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களை இழந்து தென் ஆப்பிரிக்கா திணறல் | South Africa lost 6 wickets in the Sydney Test cricket match

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது. சிட்னியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 131 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 475 ரன்கள் குவித்தது. 3-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. உஸ்மான் கவாஜா 195, மாட் ரென்ஷா…

1 320 321 322 323 324 444