இலங்கையை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி…
இலங்கைக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். 1 ரன் எடுத்திருந்தபோது தில்சன் மதுசனகா பந்துவீச்சில் தனஞ்செயாவிடம் கேட்ச் கொடுத்து இஷான் வெளியேறினார். இதன் பின்னர் இணைந்த கில்…









