‘அழிவை நோக்கி செல்கிறதா ஒருநாள் கிரிக்கெட் போட்டி?’ – அதிர்ச்சியை வெளிப்படுத்திய யுவராஜ் சிங்
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அழிவை நோக்கி செல்கிறதா என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகில் 20 ஓவர் போட்டிகள் வருகைக்கு பின்னர், 50 ஓவர் போட்டிகள் கணிசமாக குறையத் தொடங்கியுள்ளன. பந்துக்கு பந்து விறுவிறுப்பு, மழையாய் பொழியும் சிக்சர் பவுண்டரிகள் என டி20 போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு போதையாய் மாறியுள்ளன. தொடக்கத்தில் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது கிரிக்கெட் விளையாடும் பெரும்பாலான நாடுகளில் இதே மாதிரியான…









