Browsing: விளையாட்டு

‘கங்குலியிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை…’ – பாக். முன்னாள் கேப்டன் கடும் விமர்சனம்

டெஸ்ட் போட்டி குறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்த சவுரவ் கங்குலியை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கடுமையாக விமர்சித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியனுக்கான இறுதிப்போட்டி கடந்த 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணி எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.முன்பு கடந்த 2021 இல் நடந்த இறுதிப்…

மறக்குமா நெஞ்சம் | 1999-ல் இதே நாளில் நடைபெற்ற உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி: AUS vs SA | 1999 ODI World Cup semi final australia versus vs south africa held on this day

பர்மிங்காம்: எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாத வாக்கில் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், இதே நாளில் கடந்த 1999-ல் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியை சற்றே ரீவைண்ட் செய்வோம். இந்தப் போட்டி சமனில் முடிந்தது. இருந்தாலும் ஆஸி. இறுதிக்கு முன்னேறியது. தென்னாப்பிரிக்க அணிக்கு ஹார்ட்பிரேக்காக அமைந்தது. கிரிக்கெட் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத போட்டிகளில் அதுவும் ஒன்று.…

சென்னையில் நடைபெற்ற உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரை வென்றது எகிப்து அணி…

சென்னையில் நடைபெற்ற உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரின் இறுதிப் போட்டியில் மலேசியாவை வீழ்த்தி எகிப்து அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடர் சென்னையில் கடந்த 13-ஆம் தேதி தொடங்கி 5 நாட்களாக நடைபெற்று வந்தது. அரையிறுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, மலேசியாவிடம் தோல்வி அடைந்தது. இதன் மூலம் மலேசியா இறுதிப்போட்டிக்கு சென்றது. மற்றொரு போட்டியில் ஜப்பானை வீழ்த்தி எகிப்து இறுதிப் போட்டிக்கு சென்றது.இதையும் படிங்க: Video: அதிக மார்க் எடுத்திருக்கேன்.. என்னை ஏன்…

TNPL 2023: அஜிதேஷ் சதம்; கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ்!

டிஎன்பிஎல் 7 வது சீசனின் லீக் போட்டிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதியது.டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது.சச்சின் மற்றும் சுரேஷ்குமார் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். 2வது ஓவரிலே சோனு யாதவ் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார் சச்சின்.TNPLலைகா கோவை கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன சாய்…

BAN vs AFG | ஆப்கானிஸ்தானுக்கு 662 ரன்கள் இலக்கு | bangladesh set 662 runs as target for afghanistan in test match

டாக்கா: டாக்கா டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 662 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேச அணி. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது. இரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 382 ரன்கள் குவித்தது. நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 146 ரன்கள் விளாசினார். அதேவேளையில் ஆப்கானிஸ்தான்…

”மனைவிக்காக கடலில் குதித்த ரோகித் சர்மா” எதற்கு தெரியுமா?

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்த காரியம் குறித்து அவரது மனைவியின் இன்ஸ்டா ஸ்டோரி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்த மாதம் மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட…

TNPL 2023: `பரபர ஆட்டம்!’ திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்|Photo Album|TNPL 2023 tiruppur vs Chepauk match Photo Album

TNPL 2023: நேற்றைய ஆட்டத்தில் ஐ ட்ரிம் திருப்பூர் தமிழன்ஸ் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் பரபர தருணங்கள் இதோ! |Photo Album நன்றி

“இது முதல் முறை அல்ல… எனக்கு பழகிவிட்டது!” – WTC இறுதியில் உட்கார வைத்தது பற்றி அஸ்வின் ஓபன் டாக் | Ravichandran Ashwin Breaks Silence On WTC Final Snub

நம்பர் 1 டெஸ்ட் பவுலராக ஐசிசி பட்டியலில் இடம்பெற்றிருந்தும் இந்திய அணியினரால் ஏதோ நேற்றுதான் ஆடவந்த சின்னப்பிள்ளை போல நடத்தப்பட்ட அஸ்வின், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தன்னை உட்கார வைத்தது, தனக்கு ஓர் இடர்பாட்டுத் தடை மட்டும்தானே தவிர தனக்கான‘பின்னடைவு’ அல்ல என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டிகளில் பகிர்ந்தவை: “என்னைப் பொறுத்தவரை இது எனக்குப் பின்னடைவு அல்ல. இது ஓர் இடர்பாட்டுத் தடை மட்டுமே. நான் இதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு…

ஆசிய கோப்பைக்கான அட்டவணை வெளியீடு – ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்குகிறது

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய அணிகள் ஆசிய கோப்பை தொடரை விளையாடுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தொடரை இம்முறை பாகிஸ்தான், இலங்கை இணைந்து நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற முறை டி20யாக நடைபெற்ற இந்த ஆசிய கோப்பை, இந்த முறை ஒருநாள் தொடராக நடைபெறவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஒரு பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மற்றொரு பிரிவிலும் இடம்பெற்றுள்ளது.பாகிஸ்தானில் விளையாட இந்தியா மறுத்துவிட்ட நிலையில், இந்தியாவுக்கான போட்டிகள்…

1 248 249 250 251 252 447