‘உன்னால் இதைச் செய்ய முடியாது என்று சொன்னால்.!’- ஸ்ரேயாஸ் ஐயர் | “If someone says you can’t do this…!” – Shreyas

Share

நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

களத்தில் அதிரடியான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் Jio Hotstar-க்கு பேட்டி அளித்திருக்கும் அவர் தன் மீதான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பது குறித்து பேசியிருக்கிறார்.

“என்னைச் சுற்றியுள்ளவர்கள், “இந்தச் சூழலில் உன்னால் இதைச் செய்ய முடியாது, இது இயலாத காரியம்’ என்று சொல்லும்போது, அதைக் கேட்பது எனக்குப் பிடிக்காது.

ஸ்ரேயாஸ் ஐயர்

ஸ்ரேயாஸ் ஐயர்

அவர்கள் சொன்னது தவறு என்று நிரூபித்தே தீர வேண்டும் என்று நினைப்பேன். என்னை நானே அதிகமாக வருத்திக்கொண்டு, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மீண்டு வந்து அவர்கள் கூறுவது தவறென நிரூபிக்க முயற்சிப்பேன்.

குறிப்பாக காயங்களுக்குப் பிறகு, அந்த எண்ணமே என்னை முன்னோக்கி நகர்த்துகிறது. எனக்கு முதுகில் காயம் ஏற்பட்டபோது, ‘இனி இவனால் பழையபடி விளையாட முடியாது’ என்று சிலர் சொன்னார்கள். ‘ஏன் என்னால் முடியாது?’ என்று நான் எனக்கே கேள்வி கேட்டுக்கொண்டேன்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com