Browsing: அரசியல்

தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழ்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையத்தில் நான்கரை ஆண்டுகளாக தமிழறிஞர் டிட்டோனி க.இரா.முத்துச்சாமி பேசா நோன்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் தமிழ் செழிக்க வேண்டுமானால் தமிழ் பயிற்று மொழியாக அறிவிக்கப்பட வேண்டும். இதை…

வ.உ.சி பிறந்தநாள் விழாவில் மோடி குறித்த கேள்விக்கு வைகோ காட்டம்

கோவை: கோவையில் நடந்த வ.உ.சி பிறந்தநாள் விழாவில் ‘‘உயர்ந்த தலைவரை பற்றி பேசும்போது, யாரையோ பற்றி பேசுகிறீர்கள்’’ என மோடி குறித்த கேள்விக்கு வைகோ காட்டமான பதில் அளித்தார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி 151வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சி இழுத்த செக்கிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மலர் தூவி மரியாதை செலுத்த வந்தார். அப்போது அவர் அளித்த ேபட்டி:  அவிநாசி சாலைக்கு வ.உ.சி பெயர் வைப்பது …

மாணவிகளுக்கு ரூ.1000 திட்டம் அதிமுக எம்பி ரவீந்திரநாத் வரவேற்பு

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நேற்றிரவு அதிமுகவை சேர்ந்த தேனி எம்பி ரவீந்திரநாத் சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் அவர்  நிருபர்களிடம் கூறுகையில், திமுக அரசு அறிவித்துள்ள மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன். அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலாசிக்கப்பட்டு வருகிறது என்றார். Source link

மழையால் பாதித்த நிலங்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து உரிய இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து அவர்கள் பயிர் காப்பீடு செய்திருந்தாலும், செய்யாவிட்டாலும், அவர்கள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். இழப்பீடு உடனே கிடைத்தால் தான் விவசாயிகள் மேலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாமல், மீண்டும் தாளடி பயிர் செய்ய ஏதுவாக இருக்கும்.…

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் அனைத்து இந்தியர்களும் கைகோர்ப்பது கட்டாயம்: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் அனைத்து இந்தியர்களும் கைகோர்த்து இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கே.எஸ்.அழகிரி அறைகூவல் விடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராகுல்காந்தி, செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3500 கி.மீ., 150 நாட்கள் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் அனைத்து இந்தியர்களும் கைகோர்த்து இணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இந்திய ஒற்றுமைப் பயணம்…

நாவடக்கம் தேவை; அரசியல் முதிர்ச்சியற்ற அண்ணாமலை: பாலகிருஷ்ணன் தாக்கு

திருவாரூர்: இந்தியா உலகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது என பாஜக கதை விடுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார். இதுகுறித்து திருவாரூரில் அவர் அளித்த பேட்டி: பிரிட்டனை தாண்டி 5வது வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறப்போகிறது என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்தியா ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஒரு நாடு வளர்கிறது என்றால் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும். அந்நிய செலாவணி மிச்சமாக வேண்டும். இந்தியா உலகத்தில்…

பாஜகவுடன் மோதல் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ‘பப்பு’: அமித் ஷாவை சாடிய திரிணாமுல் எம்பி

கொல்கத்தா: இந்தியாவின் மிகப்பெரிய ‘பப்பு’ என்று குறிப்பிட்டு அமித் ஷா புகைப்படத்துடன் கூடிய பனியன் வாசகத்தை திரிணாமுல் எம்பி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் – பாஜக இடையே மோதல்கள் அதிகரித்துள்ளன. திரிணாமுல் கட்சியை சேர்ந்த எம்பி, எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் பல வழக்குகளை தொடர்ந்துள்ளன. அதனால் ஆளுங்கட்சிக்கும், ஒன்றிய பாஜக அரசுக்கும் மோதல்கள் அதிகரிப்பதால் மூத்த தலைவர்கள் மத்தியில் காரசார விவாதங்களும் தொடர்கின்றன.…

சொல்லிட்டாங்க…

* கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்தி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூகநீதியை ஒன்றிய அரசு காக்க வேண்டும். – பாமக நிறுவனர் ராமதாஸ் * நாட்டில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். தமிழகத்தில் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த இருப்பதை வரவேற்கிறோம். – ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்* ஒன்றிய அரசின் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்னும் நவதாராளமய கொள்கையில் நெடுஞ்சாலைகளும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளன. – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்* மக்களின்…

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று காலை தீர்ப்பு: தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் மீண்டும் பரபரப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இன்று காலை தீர்ப்பளிக்கவுள்ளது.அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த…

ஒன்றிய அரசு உடைத்தால் மண் சட்டி மாநிலங்கள் உடைத்தால் பொன் சட்டி: பிரதமர் மோடிக்கு நிபுணர்கள் முன்வைக்கும் 10 கேள்விகள்

‘இலவசம்’ என்ற ஒரு வார்த்தை, இன்று ஒட்டுமொத்த நாட்டையுமே பரபரப்பாக்கி உள்ளது. பிரதமர் மோடி முதல் மாநில முதல்வர்கள், அரசியல்வாதிகள், உச்ச நீதிமன்றம், பொதுமக்கள் வரை அனைவரும் விவாதிக்கும் முக்கிய பேசு பொருளாக மாறி உள்ளது. இதற்கு விதை போட்டவர் பிரதமர் மோடிதான். ‘இலவசங்கள் என்பது அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கி கலாசாரம். இலவசங்களால் நாடு குட்டிச் சுவராகிவிடும்’ என்று அவர் தெரிவித்தார். இலவசங்களை மாநில அரசுகளும், அவற்றை வழிநடத்தும் மாநில கட்சிகளும் மட்டுமே வழங்குவது இல்லை.…

1 98 99 100 101 102 161