Browsing: அரசியல்

நினைவு சின்னங்களை பராமரிக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை: ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி நினைவு இல்லம் சரியாக பராமரிக்கப்படவில்லை. இதேபோன்று மெரினாவில் உள்ள, மாநில உயர் கல்வி மன்ற வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது, அதற்குஅம்மா வளாகம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால், அங்கு பராமரிப்புப் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படுவதில்லை. எனவே, முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, தியாகிகள் மற்றும் தலைவர்களின் நினைவுச் சின்னங்களை பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். Source link

ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்க வேண்டும்: ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ்-ன் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் மனு

சென்னை: ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்க வேண்டும் என ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் மனு அளித்துள்ளார். பின்னர் பேசிய அவர்; அதிமுக அலுவலகத்துக்கு ஓபிஎஸ் செல்லும் தேதி, விரைவில் அறிவிக்கப்படும். ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. ஓபிஎஸ் மனம் வருந்தும் படி இபிஎஸ் பேசுவதை கண்டிக்கிறோம் என கூறினார். சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் தீர்ப்பின்படி ஓபிஎஸ்-ன் ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்தாகவில்லை…

என்னை சந்திக்க ஓபிஎஸ் மட்டுமல்ல யார் வந்தாலும் சந்திப்பேன்: சசிகலா பேட்டி

திருத்துறைப்பூண்டி: அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பதை பொதுமக்களும், கழக உடன்பிறப்புகளும் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என திருத்துறைப்பூண்டியில் சசிகலா தெரிவித்துள்ளார். என்னை சந்திக்க ஓபிஎஸ் மட்டுமல்ல யார் வந்தாலும் சந்திப்பேன் எனவும் கூறியுள்ளார். Source link

காங்கிரஸ் புத்துணர்வு பெறும் சோனியாகாந்தி வாழ்த்து செய்தி

நாகர்கோவில்: ராகுல் நடைபயணம் வெற்றி பெற காங்கிரஸ் தலைவர் சோனியாஅனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ‘நான் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகிறேன், அதனால் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை, ராகுல்காந்தியின் இந்த பயணத்திற்கு பிறகு காங்கிரஸ் மிகப்பெரிய புத்துணர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நடைபயணத்தை சமூக ஊடகங்களில் நேரலையில் பார்க்கிறேன். நான் இந்த நிகழ்வில் உங்களுடன் பங்கேற்பது போன்றே உணர்கிறேன். ஒற்றுமையாக நாம் முன்னேறி செல்வோம்’ என்று கூறியுள்ளார். Source link

வரலாற்றில் காணாத பொருளாதார நெருக்கடியால் பேரழிவை நோக்கி நாடு நகர்கிறது: நடைபயண பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பரபரப்பு பேச்சு

நாகர்கோவில்: இந்திய தேச ஒற்றுமை நடைபயணத்தின் தொடக்கமாக கன்னியாகுமரியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில்  ராகுல்காந்தி பேசியதாவது: இன்று இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.வால் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. இது அவர்களுக்கான தனிப்பட்ட கொடி என்று நினைக்கிறார்கள். தனிப்பட்ட முறையில், அவர்கள் மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். மதத்தின் மூலம், மொழியின் மூலம் பிளவுப்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களால் ஒரு நாளும் தேசத்தை பிளவுப்படுத்த முடியாது. இந்த நாடு ஒரே நாடாக, ஒற்றுமையாக இருக்கும்.…

போக்குவரத்துக்கழக வருவாயை அதிகரிக்க நடத்துனருக்கு இலக்கா? ராமதாஸ் கேள்வி

சென்னை: போக்குவரத்துக்கழக வருவாயை அதிகரிக்க நடத்துனருக்கு இலக்கு நிர்ணயிப்பதா என்று அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, ஒவ்வொரு பேருந்தின் மூலமும் ஒவ்வொரு சுற்றுமுறைக்கும் (ஷிஃப்ட்) ஒரு குறிப்பிட்ட தொகையை வருவாயாக ஈட்ட வேண்டும் என்று போக்குவரத்துக் கழகங்கள் இலக்கு நிர்ணயித்திருக்கின்றன. போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை உயர்த்துவதற்காக ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அந்த சுமையை நடத்துனர்கள் மீது திணிப்பது போக்குவரத்துக்…

பெரு முதலாளிகள் இல்லாமல் பாஜகவால் இருக்க முடியாது; ஆங்கிலேயர் ஆட்சி போலவே மோடி ஆட்சி: ராகுல் காந்தி பேச்சு..!

குமரி: ஆங்கிலேயர் ஆட்சி போலவே மோடி ஆட்சி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் இருந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 3,570 கி.மீ, தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரேதேசங்கள் வழியாக பாரத் ஜோடோ யாத்ரா என்ற 150 நாட்கள் பாத யாத்திரையில் 3,570 கி.மீ. பயணம் மேற்கொள்கிறார். இந்திய ஒற்றுமை யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மாநில…

போகிறவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: டி.ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை: சென்னை ராயபுரத்தில் அதிமுக கட்சி நிர்வாகியின் படத்தை திறந்து வைத்த பின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியின் கருத்து குறித்து செய்தியாளார்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அவர் ‘‘என் மாநிலம் வேற, என் மாநிலத்தில் தகுதியானவர்களின் கருத்துக்கு பதில் கூறுகிறேன். ஆனால், புகழேந்தி யாருன்னு தெரியாதவர். அவரது பேட்டியை பார்ப்பதில்லை. வழியில் வந்து போகிறவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை’’ என்றார். Source link

அதிமுக பொதுக்குழு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஓபிஎஸ் தொடர்ந்த இந்த வழக்கில் தனி நீதிபதி ஜெயசந்திரன், அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் அதற்கு முன்னதாக இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கில்…

சொல்லிட்டாங்க…

* நாட்டில் உள்ள 10.5 லட்சம் அரசு பள்ளிகளை 5 ஆண்டுகளில் நவீனமாக்க மோடி மாநில அரசுகளுடன் ஆலோசிக்க வேண்டும். – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்* மத்தியில் பாஜ அல்லாத அரசை தேர்ந்தெடுத்த பிறகு நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். – தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்* பிராந்திய கட்சிகளும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் நேரம் இது. எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டவே உழைக்கிறேன். – பீகார் முதல்வர் நிதிஷ்குமார்* ராகுல் காஷ்மீர் வரை…

1 97 98 99 100 101 161