Browsing: அரசியல்

மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வழங்காவிட்டால் என்எல்சி நிறுவனத்திற்கு பூட்டு போடுவோம்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தை கண்டித்து பாமக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசியதாவது:என்எல்சி இந்தியா நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நெய்வேலி மற்றும் சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடு நிலங்களை கொடுத்தனர். ஆனால் இதுநாள் வரையில் அவர்களுக்கு உரிய இழப்பீடும், நிரந்தர வேலையும் வழங்காமல் என்எல்சி நிறுவனம் துரோகம் செய்துள்ளது. குறிப்பாக என்எல்சி சமீபத்தில் நடத்திய 293 பொறியாளர்கள் தேர்வில் ஒருவர்…

பாஜ திட்ட செயல்பாடுகள் விளக்க பொதுக்கூட்டம்

பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில், பொன்னேரி அருகே மீஞ்சூர் வடக்கு ஒன்றியம், பழவேற்காட்டில் நேற்று மாலை பாரதிய ஜனதா மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்கள் அறிமுகம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மீனவர் பிரிவு தலைவர் பசியாவரம் சுப்பிரமணி தலைமை தாங்கினர்.  இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர்கள் சிவராஜ், திவாகரன், பொருளாளர் சங்கர் குமார், மாவட்ட செயலாளர் பரந்தாமன், மாவட்ட விருந்தோம்பல்…

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஒன்றரை கோடி தொண்டர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை ஐகோர்ட் வழங்கியுள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்துள்ளது உயர்நீதிமன்றம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தர்மம் வென்றுள்ளது, நியாயம் வென்றுள்ளதாக ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். Source link

ஒற்றைத்தலைமை இபிஎஸ் தான் என ஏற்றுக்கொண்டால் ஓபிஎஸ்சை அதிமுகவில் இணைத்துக்கொள்வோம்: கடம்பூர் ராஜு

சென்னை: ஒற்றைத்தலைமை இபிஎஸ் தான் என ஏற்றுக்கொண்டால் ஓபிஎஸ்சை அதிமுகவில் இணைத்துக்கொள்வோம் என கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இபிஎஸ் அதிமுக ஒற்றைத்தலைமைக்கு முழுமையாக வந்தபின் சசிகலா, தினகரனை கட்சியில் இணைப்பது பற்றி முடிவெடுப்பார் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். Source link

பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் நாளை முறையீடு

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார். கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக  பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி  ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு உயர் நீதிமன்ற இரு  நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தனர். இந்த…

லெனின் மறைவுக்கு வைகோ இரங்கல்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வலதுகரமாக விளங்கிய லெனின், பொதுவுடமைக் கொள்கையில் உறுதியாக நின்றவர். தமிழர் நலனுக்காக போராட்டக் களத்தில் நின்ற உயர்ந்த லட்சியவாதி அவர். ஓர் இயற்கை மருத்துவரும் ஆவார். லெனின் மறைவு தமிழ்நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு, அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கும். பேரழிவுக்கு எதிரான பேரியக்கத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். லெனின் எந்த லட்சியங்களுக்காகப் போராடினாரோ அவற்றை தொடர்ந்து நிறைவேற்றுவதுதான்…

பீகாரை அடுத்து மணிப்பூரிலும் பாஜக- ஜேடியு கூட்டணி முறிவு.. நிதீஷ் குமார் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்ததால் பரபரப்பு

இம்பால்: மணிப்பூரில் பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி விலக்கிக் கொண்ட நிலையில், திடீர் திருப்பமாக ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் ஐக்கியமாயினர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் சட்டசபைக்கு கடந்த மார்ச்சில் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 32 தொகுதிகளில் பாஜக வென்றது. பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து பாஜகவின் வைரன்சிங் முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் பீகாரில் பாஜக ஐக்கிய…

தெலங்கானாவில் பரபரப்பு நிர்மலா சீதாராமனின் காரை மறித்து மறியல்: காங் – பாஜ மோதல்

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்திற்கு வந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காமாரெட்டி மாவட்டத்தில் பாஜ நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர், ஜஹீராபாத்தில் இருந்து காமாரெட்டி மாவட்டத்தில் உள்ள பன்ஸ்வாராவுக்குச் காரில் சென்று கொண்டிருந்த போது, விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி கொண்டிருந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், அவருடைய வாகனத்தை வழிமறித்தனர். இதனால், நிதியமைச்சரின் கார் உட்பட பாதுகாப்பு வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, அங்கு வந்த பாஜ.வினர் காங்கிரசாரை கண்டித்து…

சொல்லிட்டாங்க…

* ஒன்றிய மற்றும் மாநிலத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி மூலம் மாநில மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. – பிரதமர் மோடி* காங்கிரஸ் புதிய தலைவர் தேர்தல் கட்சியின் விதி முறைப்படி நடக்கும். தேர்தல் நடத்தி தலைவரை தேர்வு செய்யும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. – காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கான்* நீட் விலக்குதான் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஒரே தீர்வு. நீட் சட்டத்திற்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். -…

உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; எடப்பாடி ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்: ஓபிஎஸ் அணியினர் சோகம்

சென்னை: உயர் நீதிமன்ற அமர்வு இன்று அளித்த தீர்ப்பையொட்டி எடப்பாடி ஆதரவாளர்கள் சென்னையில் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஓபிஎஸ் அணியினர் சோகத்தில் மூழ்கினர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பாலான ஆதரவாளர்களை திரட்டி, எடப்பாடி பழனிசாமி கடந்த ஜுலை மாதம் 11ம் தேதி அதிமுக சிறப்பு பொதுக்குழுவை கூட்டினார். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து…

1 99 100 101 102 103 161