Browsing: அரசியல்

உயர்நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: உயர்நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொடுமதிகளை முறியடிக்க தூய்மையான மனதுடன் போராடி வருகிறோம், இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது என பழனிசாமி கூறியுள்ளார். Source link

அரசியலில் இனி ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளர் என்பதை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அரசியலில் இனி ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். Source link

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர், மோகன் அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.  Source link

நான் அரசியலில் இல்லாவிட்டால் ஆடு, மாடு மேய்த்து, வயலில் இறங்கி என்னால் வேலை பார்க்க முடியும்: அண்ணாமலை பரபரப்பு பேட்டி

சென்னை: சுதந்திர போராட்ட தியாகி பூலித்தேவனின் 307வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் நடந்த நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, துணை தலைவர் கரு.நாகராஜன், முன்னாள் மாவட்ட துணை தலைவர் ஐ.கருப்பையா, பசும்பொன் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, அண்ணாமலை அளித்த பேட்டி: தமிழகத்தின் நிகர வருமானம்  குறைந்துள்ளதற்கு தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்  பதில் சொல்ல வேண்டும். தமிழகத்தின் அரசியலுக்கு அண்ணாமலை சாபக்கேடு…

திமுக மூத்த நிர்வாகி செழியன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை; திமுக மூத்த நிர்வாகி செழியன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்; ‘திருவல்லிக்கேணி பகுதியில் கழகம் வளர்த்த உண்மைத் தொண்டர், முன்னாள் பகுதிச் செயலாளரும், தற்போதைய பகுதிக் கழகத்தின் அவைத்தலைவருமான திரு. க.வே. செழியன் அவர்கள் மறைவுற்றார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஈடுசெய்யவியலா இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திருவல்லிக்கேணி பகுதி கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…

காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் போட்டியிடப்போவதாக தகவல்

டெல்லி: அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல்காந்தியும், சோனியா காந்தியும் போட்டியிடப்போவது இல்லை என்று அறிவித்த நிலையில் அசோக் கெலாட்டை நிறுத்த சோனியா காந்தி முடிவு செய்திருந்தார். Source link

வாஜ்பாய், அத்வானி ஆதரவாளர்களை ஓரம் கட்டும் குஜராத் கோஷ்டி மார்பில் பாயும் வளர்த்த கிடா: குருவை மிஞ்சும் சிஷ்யர்கள்: கொதிக்கும் மூத்த தலைவர்கள்: பாஜ.வில் முற்றும் மோதல்கள்

‘வளர்த்த கிடா மார்பில் பாயும்’ என்பார்கள். இன்று நாடு முழுவதும் பாஜ என்ற கட்சி வேரூன்றி நிற்கிறது என்றால், அதற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானியின் உழைப்பும், அர்ப்பணிப்பும்தான் முக்கிய காரணம். ஆர்ஆஸ்எஸ்.சின் ஆசியுடனும், அதன் கொள்கைகளுடனும் 1951ல் உருவான கட்சிதான் ‘பாரதிய ஜனசங்கம்.’ சுருக்கமாக, ‘ஜனசங்’ என்பார்கள். இதன் முதல் தலைவர் சியாம் பிரசாத் முகர்ஜி. சுதந்திரத்துக்குப் பிறகு நேருவின் இடைக்கால அரசில் அமைச்சராக இருந்த முகர்ஜி, தீவிர வலது சாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, அமைச்சர்…

சென்னையில் 2ம் தேதி அனைத்து மத தலைவர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம்: காதர்மொகிதீன் அறிவிப்பு

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேச-நேச திருப்பயணம் என்ற பெயரில் அனைத்து மத தலைவர்களையும் ஒருங்கிணைத்து கருத்தரங்கம் வருகிற 2ம் தேதி மாலை 5.30 மணியளவில் சென்னை ராயபுரம் மேற்கு மாதா சர்ச் சாலையில் உள்ள ரம்ஜான் மஹாலில் கருத்தரங்கம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராகிய நான் தலைமை வகிக்கிறேன். கேரளா சட்டமன்ற…

ஹேமந்த் சோரன் அரசை கவிழ்க்க பாஜ குதிரை பேரம் ஜார்கண்ட் எம்எல்ஏக்கள் சட்டீஸ்கருக்கு மாற்றம்: தனி விமானத்தில் பயணம்

ராஞ்சி: ஜார்கண்ட் அரசை கவிழ்க்க பாஜவின் குதிரை பேரத்தை தடுக்க ஆளும்கட்சியை சேர்ந்த 40 எம்எல்ஏக்களை சட்டீஸ்கருக்கு தனி விமானம் மூலம் முதல்வர் ஹேமந்த் சோரன் அனுப்பி வைத்தார். ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்தாண்டு ஹேமந்த் சோரன், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சுரங்க குத்தகை ஒதுக்கீடு பெற்றதாக பாஜ குற்றம்சாட்டியது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஹேமந்த் சோரன் தனது…

குலாம் நபி ஆசாத்தை விரைவில் சந்தித்து பேசுவேன்: ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை: காங்கிரசில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத்தை விரைவில் நேரில் சந்தித்து பேசுவேன் என்று ஜி.கே.வாசன் கூறினார். ஜி.கே.வாசன், குலாம் நபி ஆசாத்துடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து, ஜி.கே.வாசனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ‘‘காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். எனது நெருங்கிய நண்பர். அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் அவருடன் தொலைபேசியில் பேசினேன். தற்போது நான் டெல்லி செல்ல…

1 100 101 102 103 104 161