Browsing: அரசியல்

ராகுல் நடைபயணம் ஒருங்கிணைக்க காங்கிரசில் 18 குழுக்கள் அமைப்பு: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: ராகுல்காந்தி நடைபயணத்தை ஒருங்கிணைக்க 18 பேர் தலைமையில் குழுக்களை அமைத்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ேக.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பயணம் தொடங்குகிறார். இதற்காக 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தமிழக ஒருங்கிணைப்பாளராக டாக்டர் கே.ஜெயக்குமார், எம்.பி., இருப்பார். வரவேற்புக் குழு- விஜய் வசந்த் எம்பி, தங்கும் வசதி ஏற்பாட்டுக் குழு-எஸ்.ஜோதிமணி எம்பி, பொதுக்கூட்ட…

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு விரைவில் பஞ்சப்படி வழங்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து அதிமுக அரசால் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. போக்குவரத்துக் கழகங்களின் கடன் மற்றும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி காலம் தாழ்த்திக் கொண்டிருந்தார்கள். தற்போது போக்குவரத்துத் துறை அமைச்சர், தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி இறுதியாக ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதற்காக முதல்வர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு…

பாடை கட்டி மாலையோடு காத்திருக்கோம்… மாஜி அமைச்சர் உதயகுமாரிடம் தொண்டர் பேச்சு வைரல்

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு, கட்சித் தொண்டர் ஒருவர் ‘பாடை கட்டி மாலையுடன் காத்திருக்கிறோம்’ என்று போனில் பேசிய ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு, ஒருவர் செல்போனில் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது. இந்த ஆடியோ பேச்சு வருமாறு:‘ஹலோ’.‘அண்ணன் வணக்கங்கண்ணே’.‘வணக்கம்.. சொல்லுங்க’.‘அண்ணே பேட்டி அருமையா இருந்தது..’.‘எங்கே இருந்து பேசுறீங்க?’.‘சங்கரன்கோவில்ல இருந்து பேசுறேண்ணே… பேட்டி அருமையா இருந்தது. அன்னைக்கு ஒரு பேட்டி கொடுத்தீங்கள்லண்ணே… ‘ஓபிஎஸ் கட்சியில் இணைந்தால் நான் தற்கொலையே பண்ணிக்குவேன்’னு…

ஒருதாய் மக்கள் பிரிந்து உள்ளோம், போருக்கு ஒன்றாக செல்வோம்: டி.டி.தினகரன்

சென்னை: யாரும் யாருடன் இணைய வேண்டும் என்று சொல்லவில்லை, ஒருதாய் மக்கள் பிரிந்து உள்ளோம், போருக்கு ஒன்றாக செல்வோம் என அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.தினகரன் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கலாம் டி.டி.தினகரன் கூறியுள்ளார். Source link

ஒரு இயக்கம் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும்தான் ஆரோக்கியமான ஜனநாயகம்: கே.எஸ். அழகிரி பேட்டி

திருச்சி: ஒரு இயக்கம் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும்தான் ஆரோக்கியமான ஜனநாயகம் என திருச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இல்லாமலேயே காந்தி கட்சியை வழிநடத்தினார், அதுபோல ராகுல் காந்தியும் தேவைப்பட்டால் தலைவராவார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். Source link

எனது உடம்பில் காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது: காங்கிரசில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்

டெல்லி: எனது உடம்பில் காங்கிரஸ் ரத்தம் ஓடுவதால், 6 நாட்களாக தூங்கவில்லை என காங்கிரசில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். பிரதமர் மோடி, மனிதாபிமானம் மிக்கவர் எனவும் குலாம்நபி ஆசாத் பாராட்டியுள்ளார். Source link

அரசியல் வாழ்வில் அடுத்த அடியை எடுத்து வைக்க மாந்திரீகர்களை வைத்து ஓபிஎஸ் விசேஷ பூஜை

தேனி: ஜோதிட, ஜாதக, எண் கணித அடிப்படையில் தனது அரசியல் வாழ்வை முன்னெடுத்து செல்லும் முயற்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பரிகார பூஜை உள்ளிட்டவைகளில் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம்  தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அப்பீல் வழக்கில் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள அவரது…

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நடிகர் பாக்யராஜ் ஆதரவு: அதிமுகவினர் இணைந்து செயல்பட கோரிக்கை

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்துடன் நடிகர் பாக்யராஜ் நேற்று திடீரென சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பிறகு அவர் கூறும்போது, அதிமுகவினர் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எதிரும் புதிருமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவில் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர் கடந்த 11ம் தேதி ஒன்றுகூடி, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர். இந்த தேர்வை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே…

மொய் விருந்து பேராவூரணி மக்களின் பழக்கங்களில் ஒன்று தமிழகத்தின் பண்பாடு தெரியாமல் அண்ணாமலை அரசியல் செய்கிறார்

* பாஜ சொத்து மதிப்பு ரூ.5000 கோடிக்கு மேல் உயர்ந்தது எப்படி?* எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க எங்கிருந்து பணம் வந்தது?* திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி தாக்கு சென்னை: மொய் விருந்து பேராவூரணி பகுதி மக்களின் பழக்க வழக்கங்களில் ஒன்று என்றும், பண்பாடு தெரியாமல் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்று திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி கூறினார்.  திமுக தலைமை கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் வழக்கறிஞர்…

ஓபிஎஸ்சுக்கு முதல்வராகும் வெறி பிடித்துள்ளது எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று எடப்பாடியால் செயல்பட முடியாது: மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு

கொடைக்கானல்: எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று எடப்பாடியால் செயல்பட முடியாது என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எம்எல்ஏ பேசியதாவது: நாம் இயக்க தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்காகத்தான் நாம் கட்சிக்கு வந்தோம். தற்போது எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று அவர் செயல்பட முடியாது. தனிப்பட்ட முறையில் ஓபிஎஸ்சை நான்…

1 101 102 103 104 105 161