Browsing: அரசியல்

ராகுல்காந்தி நாளை மறுநாள் மீண்டும் தமிழகம் வருகிறார்: கூடலூரில் இரண்டு நாள் பாதயாத்திரை மேற்கொள்கிறார்

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3500 கி.மீட்டர் ஒற்றுமைக்கான நடைபயணம் மேற்கொள்கிறார். தனது நடை பயணத்தை கடந்த 7ம்தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். அவர் அங்கிருந்து, நேராக கேரளாவுக்கு சென்றார். அங்கு 11ம் தேதி தொடங்கிய பாதயாத்திரையானது திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்கள் வழியாக 400 கி.மீ தூரத்தை கடந்து உள்ளது. இன்று அவர் மலப்புரம் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.  கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்டு…

புதுவையில் என்ஆர்.காங்-பாஜ மோதல் முற்றுகிறது: எம்எல்ஏக்கள் பரஸ்பர குற்றச்சாட்டுகளால் பரபரப்பு

புதுச்சேரி: புதுவையில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜக ஆதரவு சுயேச்சை அங்காளன் போராட்டம் நடத்திய நிலையில் அவருக்கு எதிராக என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இருகட்சிகளுக்கு இடையே மோதல் முற்றியுள்ளது. இதனிடையே டெல்லி சென்றுள்ள சபாநாயகர் செல்வம் புதுச்சேரி திரும்பியதும் அவரை கூட்டாக சந்திக்க என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நீடிக்கிறது.புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் – பாஜ கூட்டணி ஆட்சி உள்ளது. என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக உள்ளார். இதில்…

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை: விஜயகாந்த் அறிக்கை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: கோவை, திருப்பூர், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சுறுத்தலையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க அரசு தவறி விட்டதோ என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அதே சமயம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என தமிழக அரசு…

ஆன்லைன் சூதாட்டத் தடை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டரில்: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும், ஆளுனரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. முந்தைய ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்பட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் புதிய அவசர…

சொல்லிட்டாங்க…

* நமது நாட்டின் வளர்ச்சி எப்படி முக்கியமோ, அதேபோல் நமது பாரம்பரிய பண்பாடு, கலாச்சாரத்தை பேணி காக்க வேண்டியதும் முக்கியம். ஜனாதிபதி திரவுபதி முர்மு* ஆட்சிக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்திட வேண்டும் என்ற தீயநோக்கம் கொண்ட சில அரசியல் சக்திகள் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் * மகாத்மா காந்தியின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டது எங்களது கட்சியின் கொள்கை. வேறு எந்த கட்சிக்கும் போட்டி கிடையாது. ஜனநாயக ஆசாத் கட்சி தலைவர் குலாம் நபி…

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். Source link

தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடும் நிலையில் 92 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா: சச்சின் பைலட்டுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ராஜஸ்தானில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் சிக்கல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 92 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ராஜஸ்தான் முதல்வரான அசோக் கெலாட் மற்றும் திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் ஆகியோருக்கு இடையில் போட்டி நிலவி வருகிறது. அசோக் கெலாட்டுக்கு காங்கிரஸ் தலைமையின் ஆதரவு அதிகமாக இருப்பதால், அவர் தான் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய இடங்களில் வானதி சீனிவாசன் ஆய்வு

கோவை: கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய இடங்களை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆய்வு செய்து வருகிறார். முதற்கட்டமாக கோவை சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தை பார்வையிட்டார். Source link

சொல்லிட்டாங்க…

* தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு அரசு விரைந்து முடிவு கட்ட வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ்* தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் உள்நோக்கத்தோடு தான் காய்களை நகர்த்தி வருகிறது. வன்முறைகளை கட்டவிழ்க்க முயற்சிகள் நடந்து வருகிறது. விசிக தலைவர் திருமாவளவன்* பருவநிலை மாற்றங்கள், கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடற்கரைகளில் குப்பை இருப்பது கவலை அளிக்கிறது. பிரதமர் மோடி*8 வருட பாஜ ஆட்சியில்தான் வேலையில்லா திண்டாட்டமும், விலைவாசி உயர்வும் அதிகம். முன்னாள் காங்கிரஸ் தலைவர்…

சிறப்பு பேரவை கூட்டம் நடத்த அனுமதி: ஆம்ஆத்மி அரசுக்கு பணிந்தார் ஆளுநர்

சண்டிகர்: பஞ்சாப் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான சிறப்பு சட்டப் பேரவை கூட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதி அளித்துள்ளார். பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி  நடைபெற்று வருகிறது. ஆனால், ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் ஆம்ஆத்மி  எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால்  சட்டப் பேரவையில் தங்களது அரசின் பலத்தை நிரூபிக்க வரும் 27ம் தேதி  சிறப்புக் கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் பகவந்த் மான்…

1 88 89 90 91 92 161