Browsing: அரசியல்

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா

பிரிட்டன்: இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்துள்ளார். நேற்று இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்த நிலையில் பிரதமர் லிஸ் டிரஸ் இன்று ராஜினாமா செய்துள்ளார். Source link

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்: ஓபிஎஸ் அறிவிப்பு

* நிரூபிக்காவிட்டால் எடப்பாடி ஓய்வெடுக்க வேண்டும் என கோரிக்கைசென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க. ஸ்டாலினை ரகசியமாக சந்தித்து பேசினார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு என்றும் அதை ஆதாரத்துடன் நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயாராக இருக்கிறோம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் அறிவித்துள்ளனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜேசிடி பிரபாகர், பி.எச்.பால் மனோஜ் பாண்டியன்…

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் செலவு மற்றும் நன்கொடை வசூலில் பாஜக முதலிடம்: மாற்றத்திற்கான ஜனநாயக அமைப்பு (ADR) அறிக்கை

டெல்லி: நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் செலவு மற்றும் நன்கொடை வசூலில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது.  நடப்பாண்டில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக ரூ.223.14 கோடியும் காங்கிரஸ் ரூ.102.65 கோடியும், செலவிட்டுள்ளன, ஒட்டுமொத்த அரசியல் கட்சிகள் ரூ.470.10 கோடி செலவிட்டுள்ள நிலையில், ஐந்தில் பாஜக பங்கு மட்டும் 47% ஆகும் என ADR அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் பாஜக ரூ.914.03 கோடி நன்கொடை பெற்றுள்ளது. Source link

இமாச்சலில் 62 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது பாஜ: பல எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பில்லை

புதுடெல்லி: இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்காக முதல்கட்டமாக 62 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது. இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாகூர் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இச்சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்தாண்டு பிப்ரவரியில் முடிவடைய உள்ளது. இதனால், இங்கு அடுத்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 62 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜ…

சொல்லிட்டாங்க…

* இந்தியா முன்பு புறாக்களை விடுவித்தது. தற்போது சிறுத்தைகளை விடுவிக்கிறோம். – பிரதமர் நரேந்திர மோடி* தூத்துக்குடி படுகொலைகளுக்கு முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டியவர் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி. – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ* மோடி அரசு எங்கள் கல்வி அனுபவத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்* ஆவின் பால் உற்பத்தியை அதிகரித்து தனியார் நிறுவனங்களின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். – பாமக தலைவர்…

“வரலாறு ஒருபோதும் எடப்பாடி பழனிசாமியை மன்னிக்காது” – சீமான் அறிக்கை

சென்னை: வாக்குச்செலுத்தி ஆட்சி அதிகாரத்தில் வைத்த மக்களையே படுகொலை செய்த இந்த கொடுஞ்செயலை வரலாறு ஒருபோதும்  எடப்பாடி பழனிசாமியை மன்னிக்காது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிராக மண்ணின் மக்கள் நடத்திய மக்கள்திரள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் 14 உயிர்களைப் பறித்த முந்தைய அதிமுக அரசின் அரசப்பயங்கரவாத நடவடிக்கையை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான…

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆனார் மல்லிகார்ஜூன கார்கே..!

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் முடிந்த நிலையில், இன்று டெல்லியில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்த தேர்தலில் வெற்றி பெற்றார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் நாடு முழுவதும் அந்த மாநில தலைமையகத்தில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குபதிவு நடத்தப்பட்டது. தேர்தலில் தகுதியான 9,915 பிரதிநிதிகள் வாக்களித்தனர்; 96 சதவீதம் வாக்குகள் பதிவாகின.…

போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி சென்னையில் போராடிய இபிஎஸ், ஜெயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கைது!

சென்னை: போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி சென்னையில் போராடிய இபிஎஸ், ஜெயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். Source link

சொல்லிட்டாங்க…

* நீதித்துறை தவறான பாதையில் சென்றால் அதை கட்டுப்படுத்த எந்த வழிமுறையும் இல்லை. ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ* அதிமுக அலுவலக சாவி விவகாரத்தை எதிர்த்து ஐகோர்ட் சென்ற ஓ.பன்னீர்செல்வம் கொட்டு வாங்கினார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி* மற்ற கட்சிகளிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு கட்சி நடத்துகிறேன் என சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன். ஜனசேனா தலைவர் பவன் கல்யாண்*இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை மண்ணை சீனா பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக்கூடாது.…

எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் எங்களின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்து விட்டார்: எடப்பாடி பேட்டி

சென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் தங்களின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு நிராகரித்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயக்குமாரையும், துணை செயலாளராக அக்ரி கிருஷ்ண மூர்த்தியையும் நியமனம் செய்யவேண்டும் என்று  62 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெப்பமிட்ட கடிதத்தை சபாநாயகரிடம் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அளித்தோம். மீண்டும் 2முறை நினைவூட்டல் கடிதம் வழங்கப்பட்டது. இருப்பினும், தாங்கள் கொடுத்த கோரிக்கையை ஏற்காமல் ஏற்கனவே துணைத்தலைவராக (ஓ.பன்னீர்செல்வம்)…

1 77 78 79 80 81 161