Browsing: அரசியல்

சொல்லிட்டாங்க…

* இந்திய அரசமைப்பு சட்டத்தின் நெறிமுறைகள் அனைத்தையும் தகர்த்து தவிடுபொடி ஆக்கும் வகையில் ஒன்றிய பாஜ அரசின் 8 ஆண்டுகால செயல்பாடுகள் உள்ளன. – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ* அனைத்து தரப்பு முதலீட்டாளர்கள், வெளி மாநில, வெளிநாட்டு தொழில்முனைவோர் தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில்நுட்ப ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்* கர்நாடக மாநிலம் சட்டத்தை மதிக்கும் மாநிலம். அதேநேரம், மாநில உரிமை பறிக்கப்படுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். – கர்நாடக முதல்வர்…

குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஆம்ஆத்மி கூட்டத்தில் கற்கள் வீச்சு: சிறுவனுக்கு காயம்; பாஜகவினர் அடாவடி

கதிர்காம்: கதிர்காமில் நடந்த ஆம்ஆத்மி தேர்தல் பிரசாரத்தின் போது பாஜகவினர் கற்களை வீசியதாக மாநில ஆம்ஆத்மி தலைவர் குற்றம்சாட்டி உள்ளார். குஜராத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேர்தல்  நடைபெறுகிறது. ஆளும் பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ள  நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆம்ஆத்மி, காங்கிரஸ்  கட்சிகளும் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் கதிர்காம் சட்டமன்றத் தொகுதியில் ஆம்ஆத்மி கட்சி பிரசாரம் செய்த போது, மர்ம நபர்கள் கற்களை வீசி…

அரசியலமைப்பு சட்டத்தை தகர்க்கும் ஒன்றிய அரசின் முயற்சிகளை முறியடிப்போம்: வைகோ உறுதி

சென்னை: அரசியலமைப்பு சட்டத்தைத் தகர்க்க நினைக்கும் ஒன்றிய பாஜ அரசின் முயற்சிகளை முறியடிப்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் ேநற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அரசியல் சாசன தினமான நவம்பர் 26ம் நாள், இந்த ஆண்டு கல்லூரிகளில்  கருத்தரங்கு நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அரசியல் சட்ட நாளான நவம்பர் 26ம் நாளை மறைத்து, அரசு சார்பில் கல்லூரிகளில் பாரதம், பகவத் கீதை, வேத இலக்கியம், உபநிடதங்கள், பழங்கால பஞ்சாயத்து…

ஆபாச ஆடியோ விவகாரம் அண்ணாமலையின் தூண்டுதலால் திருச்சி சூர்யா திட்டினாரா?.. கட்சியை விட்டு நீக்காமல், பொறுப்பில் இருந்து மட்டும் நீக்குவது தான் நடவடிக்கையா என பெண்கள் குமுறல்

சென்னை: ஆபாச ஆடியோ விவகாரத்தில் திருச்சி சூர்யாவுக்கு ஆதரவாக அண்ணாமலை இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளதால், பாஜவில் உள்ள பெண்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அண்ணாமலை தூண்டி விட்டதால்தான் அவர் பேசினார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.பாஜவில் மூத்த தலைவர்களை மாநில தலைவர் அண்ணாமலை ஓரங்கட்டுவதாகவும், மதிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அவர் மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஒன்றிய அமைச்சர் முருகன், எச்.ராஜா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களிடம் ஆலோசனை நடத்துவதில்லை. தான்…

சொல்லிட்டாங்க…

அரசியலமைப்பை புறக்கணித்து தவறாக பயன்படுத்துபவர்கள், இன்று அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் வித்தையில் ஈடுபட்டுள்ளனர். – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்ஒவ்வொருவரும் அவரவர் அடிப்படை கடமையை செவ்வனே நிறைவேற்றினால், நாடு புதிய உயரங்களை அடைய முடியும். – பிரதமர் மோடி70 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட சட்டத்தில், காலத்திற்கு ஏற்ற வகையில் சில திருத்தங்கள் செய்திருந்தாலும், அது மூல சட்டத்திற்கு எதிராக இருக்காது. – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைஎதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து பாஜ போட்டி…

திமுக அணிகளின் மாநில நிர்வாகிகள், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் நியமனம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக அணிகளின் மாநில நிர்வாகிகள், தணிக்கைக் குழு உறுப்பினர்களை நியமித்து பொதுச்செயலாளர்துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்; மருத்துவ அணி தலைவராக டாக்டர் கனிமொழி என்விஎன் சோமு எம்.பி., செயலாளராக டாக்டர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவ அணி துணை தலைவர்களாக எம்.செந்தில்நாதன், எ.வ.வே.கம்பன், கி.வரதராஜன், நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ அணி இணைச் செயலாளர்களாக ரா.லட்சுமணன், அ.சுபேர்கான், ஆர்.கோகுல்கிருபா சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ அணி துணைச் செயலாளர்களாக செ. வெற்றிவேல், எம்.பி.பி.எஸ்., செ.வல்லபன், எம்.பி.பி.எஸ்.,…

ஆந்திராவில் 2024ல் சட்டப்பேரவை தேர்தல் ஜனசேனா, தெலுங்கு தேசம் கட்சி ரத யாத்திரை மேற்கொள்ள முடிவு-‘ரூட் மேப்’ தயார்

திருமலை : ஆந்திராவில் 2024ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி ஜனசேனா, தெலுங்கு தேசம் கட்சி ரத யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதற்காக இரு கட்சிகளும் ‘ரூட் மேப்’ தயார் செய்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் வருகிற 2024ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர் கொண்டு வெற்றியை பிடிப்பதற்காக அனைத்து கட்சிகளும் இப்போது இருந்து தங்களது முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.  இதற்காக ஜனசேனா கட்சி தலைவர், நடிகர்  பவன் கல்யாண்…

பாக். ஆதரவு கோஷ வீடியோ பாஜ.வுக்கு காங்கிரஸ் பதிலடி

புதுடெல்லி: பாஜ.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா நேற்று, மத்தியப் பிரதேசத்தில் ராகுலின் நடை பயணம் குறித்த வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டார். 21 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில், ‘நடை பயணத்தின்போது பாகிஸ்தான் ஆதரவு முழக்கமிடுவது கேட்கிறது. இதுதான் காங்கிரசின் உண்மை,’ என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். பின்னர், இந்த வீடியோ நீக்கப்பட்டது. இது பற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பு வகிக்கும் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்த…

ராகுலுடன் பிரியங்கா குடும்பத்துடன் நடை பயணம்

கேர்தா: மத்தியப் பிரதேசத்தில் ராகுலின் நடை பயணத்தில் 2வது நாளாக நேற்று, பிரியங்கா காந்தி தனது குடும்பத்துடன் பங்கேற்றார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடை பயணம், தற்போது மத்தியப் பிரதேசத்தில் நடந்து வருகிறது. மூன்றாவது நாளான நேற்று, கார்கோன் மாவட்டத்தில் உள்ள கேர்தாவில் இருந்து நடை பயணம் தொடங்கியது. உத்தரப் பிரதேசத்துக்கான காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவருடைய கணவர் ராபர்ட் வதேரா, அவர்களின் மகன் ஆகியோர் இதில்…

சத்தியமூர்த்தி பவன் அடிதடி விவகாரம்; கையில் எடுக்கும் டெல்லி மேலிடம் தினேஷ் குண்டுராவ், ஸ்ரீவல்லபிரசாத்திடம் கார்கே விசாரணை: கே.எஸ்.அழகிரி மீது 72 புகார்கள்

சென்னை: சத்தியமூர்த்தி பவனில் நடந்த அடிதடி விவகாரத்தை டெல்லி மேலிடம் கையில் எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தினேஷ் குண்டுராவ், ஸ்ரீவல்லபிரசாத்திடம் நேற்று அகில இந்திய தலைவர் கார்கே விசாரணை நடத்தினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவத்தின் தொடர்ச்சியாக கே.எஸ்.அழகிரிக்கு எதிராக தலைமையிடம் புகார் அளிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டெல்லி சென்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து கே.எஸ்.அழகிரி குறித்து சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின்…

1 59 60 61 62 63 161