Browsing: அரசியல்

திமுக இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி நியமனம்: பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: இலக்கிய அணிப் புரவலர்களாக தஞ்சை கூத்தரசன், மு.தென்னவன், ந.செந்தில், எம்.எஸ்.சி. செந்தலை கௌதமன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி நியமிக்கப்படுகிறார். இலக்கிய அணி துணைத் தலைவர்-கவிச்சுடர் கவிதைப்பித்தன், இலக்கிய அணிச் செயலாளர்- முன்னாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன். இலக்கிய அணி இணைச் செயலாளர்கள்-கயல் தினகரன், ஈரோடு இறைவன், நந்தனம் எஸ்.நம்பிராஜன், இலக்கிய…

கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பாஜ தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு

சென்னை; தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இன்று காலை கவர்னர் ஆர்.என்.ரவியை திடீரென சந்தித்து பேசினார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று காலை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் துணை ராணுவப் படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை திடீரென…

சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமனம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியின் காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.எஸ்.திரவியத்தை நியமித்து கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரஸ் சார்பில் 14 பேர் வெற்றி பெற்றனர். ஒரு கவுன்சிலர், அதாவது காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்த நாஞ்சில் பிரசாத் கடந்த வாரம் உடல்குறைவு காரணமாக காலமானார். இதை தொடர்ந்து, தற்போது சென்னை மாநகராட்சியில் காங்கிரசின் பலம் 13 ஆக உள்ளது.  இருந்த போதிலும், சென்னை மாநகராட்சி காங்கிரஸ் தலைவர்…

சொல்லிட்டாங்க…

* நாட்டின் ஒட்டுமொத்த வளமும் மூன்று அல்லது 4 தொழில் அதிபர்கள் கையில் இருக்கிறது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்று கூறி தமிழகத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மூட பரிந்துரைக்கக்கூடாது. – பாமக நிறுவனர் ராமதாஸ்* மோடி அரசு, தேர்தல் பத்திர நன்கொடைகளின் மூலம் ஊழலுக்கு சட்டப் பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி* ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைத்து, 100 யூனிட்…

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்னதானம், நலத்திட்டஉதவி

தாம்பரம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதி திமுக சார்பில் பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை தாய்மார்களுக்கு பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி ஏற்பாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன்,…

சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவராக எம்.எஸ். திரவியம் நியமனம்

சென்னை: சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவராக எம்.எஸ். திரவியம் அவர்களை நியமனம் செய்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவராக பி. கோவிந்தராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். Source link

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் குறித்து தரக்குறைவாக பேசிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகி-திருப்பதி போலீஸ் நிலையத்தில் புகார்

திருப்பதி: தெலுங்கு தேசம் கட்சி தலைவரை தரக்குறைவாக பேசிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி திருப்பதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். தெலுங்கு தேசம் கட்சி இளைஞர் அணி சார்பில் மாநில செயலாளர் ரவி தலைமையில் திருப்பதி  அலிபிரி  காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சின்ன ரெட்டப்பாவிடம் தெலுங்கு தேச கட்சி சந்திரபாபுவை தரக்குறைவாக பேசியவரை கைது செய்ய வேண்டும் என நேற்று புகார் மனு அளித்தனர். இதுகுறித்து, இளைஞர் அணி மாவட்ட செயலாளர்…

டெல்லி மாநகராட்சிக்கு டிச.4ல் தேர்தல்!: பாஜக, ஆம் ஆத்மி, காங். இடையே மும்முனை போட்டி.. கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம்..!!

டெல்லி: டெல்லியில் மாநகராட்சிகள் தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். மாநில சட்டமன்ற தேர்தலுக்கு சற்று சளைக்காத அளவில் டெல்லி மாநகராட்சி தேர்தலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 14ம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததை அடுத்து டெல்லி முழுவதும் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. குஜராத் சட்டமன்ற தேர்தலைப்போல் டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.வார்டுகள் அனைத்தையும், பாஜக,…

செயலிழந்து கிடக்கும் நாகப்பட்டினம் ரயில்வே பணிமனைக்கு தீர்வு: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் நலனை புறக்கணித்து வருகிறது. இதில் ஒன்றிய அரசின் ரயில்வே அமைச்சகமும், தென்னக ரயில்வே நிர்வாகமும் குறிப்பாக தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. நீடாமங்கலம் மேம்பாலம், ரயில் பராமரிப்பு மையங்கள், சில ரயில்களின் எல்லை நீடிப்பு, நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை ஒவ்வொரு முறையும் நம்பிக்கையோடு எதிர்பார்ப்பதும், ஒன்றிய அரசு ஏமாற்றுவதும் வழக்கமாகியுள்ளது.ரயில்வே நிர்வாகத்தையும் தனியாருக்கு…

அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ் கதை முடிந்தது: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜெயகுமார் பேட்டி

சென்னை: அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ் கதை முடிந்த கதை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் பேசியதாவது:முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாள் வரும் 5ம் தேதி வருகிறது. இதனால் அதிமுக சார்பில் கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் வரும் 5ம் தேதி…

1 58 59 60 61 62 161