Browsing: அரசியல்

 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தமிழக ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: பாலகிருஷ்ணன் பேட்டி

ராசிபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டல பயிற்சி முகாம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் கூறுகையில், பெரு முதலாளிகளுக்கும், அம்பானி மற்றும் அதானிக்கும் கோடிக்கணக்கான கடனை தள்ளுபடி செய்கிறார்கள். கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்தி உள்ளது. பாஜவினர் கவர்னரை பார்த்து, தமிழக அரசு மீது புகார் தெரிவித்து மனு கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு பிரதமர் வந்தபோது, பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக தெரிவித்து,…

குஜராத் சட்டப்பேரவை: 89 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. முதற்கட்டமாக 19 மாவட்டங்களில் 89 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. Source link

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!!

அகமதாபாத்: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலின்முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், 89 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாஜக, ஆம்-ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.182 இடங்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இன்று மற்றும் வரும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தெற்கு குஜராத், கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் உள்ள தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்று…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. திமுக முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. Source link

கோவையில் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட சாலையை கண்டித்து அவர்களே போராட்டம்: நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கடும் தாக்கு

கோவை: அதிமுக ஆட்சியில் போடப்பட்ட சாலையை கண்டித்து அக்கட்சி போராட்டம் நடத்துகிறது. இது எவ்வளவு பெரிய வேடிக்கை என்று அமைச்சர் எ.வ.வேலு கடுமையாக தாக்கினார். கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் சாலைப்பாதுகாப்பு குழு ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் நடைபெற்றது.  பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பன்னடுக்கு மருத்துவமனை…

குஜராத்தில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு பயத்தை காட்டிட்டாங்களே… எப்போதும் இல்லாத அளவுக்கு சொந்த ஊரை சுற்றி சுற்றி வந்த மோடி, அமித்ஷா; ராகுல், கெஜ்ரிவால் மெகா வியூகம் ; ஆட்டம் கண்ட 24 ஆண்டு ‘பாஜ மாடல்’

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன?…’ இந்த பாடல் வரிகளை நினைத்தால் குஜராத் தேர்தல்தான் நினைவுக்கு வருகிறது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த குஜராத், ‘பழம் நழுவி பாலில் விழுந்தது போல்…’ 1995ல் பாஜவுக்கு கிடைத்தது. அன்று முதல் இன்று வரை ‘குஜராத் மாடல்’ ஆட்சி நடந்து வருகிறது. இந்த 24 ஆண்டு கால குஜராத் மாடலை ‘மக்களின் ஒரு விரல் புரட்சி’யான ஜனநாயக தேர்தல், ஆட்டம் காண வைத்து உள்ளது. ‘தேர்தல்’…

அதிமுக தலைவர்கள் ஒன்றிணைப்பு; சமரச திட்டத்திற்கு எடப்பாடி எதிர்ப்பு: முடிவு எடுக்க முடியாமல் திணறும் பாஜக..!

சென்னை: அதிமுக தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பாஜக கொடுத்த நெருக்கடிக்கு எடப்பாடி எதிர்ப்பு தெரிவிப்பதோடு, மறுத்து வருகிறார். அவர் சரணடையாததால் முடிவு எடுக்க முடியாமல் டெல்லி தலைவர்கள் திணறி வருகின்றனர். தமிழக அரசியலில் திமுக, அதிமுக மட்டுமே செல்வாக்கு பெற்ற கட்சிகளாக உள்ளன. தேசிய கட்சிகள் ஓரளவு செல்வாக்குடன் இருந்தாலும் கிராம அளவில் அக்கட்சிகளுக்கு பலம் இல்லை. இதனால் திராவிட கட்சிகளை சார்ந்துதான் தேசிய கட்சிகள் செயல்பட வேண்டிய சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது. அதில் அதிமுக…

ரப்பர் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஒன்றிய, மாநில அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: ரப்பர் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022ம் ஆண்டு நவம்பர் வரை நாளொன்றுக்கு ரூ.40 ஊதிய உயர்வு ஒப்பு கொள்ளப்பட்டது. ஆனால், ரப்பர் கழகம் ஊதியம் தர மறுத்ததால் கடந்த 7ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு…

ரயில் நிலையங்களில் இந்தியை திணித்து தமிழர் உணர்வுகளுடன் விளையாடக் கூடாது: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: ரயில் நிலையங்களில் இந்தியை திணித்து தமிழக மக்களின் உணர்வுகளுடன் விளையாடக் கூடாது என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் கூறியுள்ளதாவது: திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சேவை மையம் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, அதற்கு மாற்றாக சகயோக் என்று இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது.  திருப்பூர் ரயில் நிலையத்தில், சகயோக் என்ற இந்தி…

 விபத்துக்களை தடுக்க சென்னை-திருச்சிக்கு 8 வழிச்சாலை வேண்டும்: ஒன்றிய அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்

சென்னை: விபத்துக்களை தடுக்க சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி சாலையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை: தமிழ்நாட்டின் மிக முதன்மையான சாலை சென்னை – திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலை தான். இப்போது சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறைந்தபட்சம் 1.40 லட்சம் வாகனங்கள் தினமும் பயணிக்கின்றன. “இது அதன் கொள்ளளவை விட 4 மடங்கு அதிகம். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்…

1 57 58 59 60 61 161