உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள்
திருக்கழுக்குன்றம்: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாமல்லபுரத்தில் திமுக இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாமல்லபுரம் நகர இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாமல்லபுரத்தில் நடந்தது. விழாவிற்கு மாமல்லபுரம் நகர இளைஞரணி அமைப்பாளர் மோகன் குமார் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும்,…









